சில உணவகங்களில் மீண்டும் 'இருவர் மட்டும்' கட்டுப்பாடு

1 mins read
3ae67248-4c2a-448b-866d-808d249d76a4
இருவர் மட்டும் விதிமுறை தோ பாயோவில் உள்ள மெக்டோனல்ட்ஸ் உணவகத்திலும் நடப்பில் இருந்தது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

தமிழ் முரசு வாச­கர் திரு­மதி ஆர். யமுனா நேற்று பிடோக் கடைத்­தொ­கு­திக்­குச் சென்­ற­போது இரு­வர் மட்­டும் ஒன்­றாக அமர்ந்து சாப்­பிட அனு­மதி என்று அங்­குள்ள பெரும்­பா­லான விரைவு உண­வ­கங்­க­ளின் வெளியே அறி­விப்­பு­கள் ஒட்­டப்­பட்­டி­ருந்­த­தைக் கவ­னித்­தார்.

உண­வ­கம் ஒன்­றுக்­குள் சென்ற போது, 'ஹெல்த்­ஹப்' செய­லிக்குள் சென்று முழு­மை­யா­கத் தடுப்­பூசி போட்­டுக்­கொண்­ட­தை பணி­யா­ளர் ­க­ளி­டம் காட்­ட­வேண்­டி­யி­ருந்­தது.

மெக்­டோனல்ட்ஸ், பர்­கர் கிங், சப்வே உள்­ளிட்ட பல விரைவு உண­வ­கங்­கள், முழு­மை­யாகத் தடுப்­பூசி போடப்­பட்­டா­லும் அதி­க­பட்­சம் இரு­வர் மட்­டுமே சேர்ந்து அமர்ந்து உண்­ண­லாம் என்று கூறி­யுள்­ளன.

நாளை தமது நண்­பர்­கள் இரு­வ­ரு­டன் நீண்­ட­நாட்­க­ளுக்­குப் பிறகு ஒன்­றாக வெளி­யில் சாப்­பி­டும் திட்­டத்தை மாற்­றிக்கொண்­ட­தாக அவர் தமிழ் முர­சி­டம் கூறி­னார்.

கொவிட்-19 மிக வேக­மாக அண்மைய நாட்­களில் பரவி வரு­வ­தைத் தொடர்ந்து, ஆகஸ்ட் 8 வரை, இரண்டு தடுப்­பூ­சி­க­ளைப் போட்­டுக்­கொண்­டால் ஐவர் வரை ஒன்­றாக அமர்ந்து உண்­ண­லாம் என்று அர­சாங்­கம் அறி­வித்­தது.

ஆனால் தடுப்­பூசி போட்­டுக்­கொள்­ளா­த­வர்­கள் உணவகங்களில் தனி­யாக அல்­லது இரு­வ­ராக மட்­டும் அமர்ந்து உண்­ண­லாம் என்று அர­சாங்­கம் கூறி­யது.

அத­னால் எவ்­வ­ளவு வாடிக்­கை­யா­ளர்­களை அனு­ம­திப்­பது என்­பதை பல உண­வ­கங்­கள் தாங்­க­ளா­கவே தீர்­மா­னித்­துள்­ளன.