மின்வர்த்தகத் துறையில் நுழைந்து பணியாற்றுவதற்குத் தேவையான திறன்களை தனது தற்போதைய, மற்றும் முன்னாள் மாணவர்களுக்கு வழங்கும் நோக்கில் தெமாசெக் பலதுறைத் தொழில்கல்லூரி புதிய அறிவார்ந்த மின்வர்த்தக நிலையத்தைத் தொடங்கியுள்ளது.
கல்வி, மனிதவளம் ஆகியவற்றுக்கான துணையமைச்சர் கான் சியாவ் ஹுவாங் நிலையத்தை நேற்று திறந்து வைத்தார்.
பலதுறைத் தொழில்கல்லூரியும் ஸ்கில்ஸ்ஃபியூச்சர் சேர்ந்து வழங்கிய $1 மில்லியன் நிதியில் நிலையம் அமைக்கப்பட்டது.
நிறுவனங்கள், வளர்ந்துவரும் தொழில்முனைவர்கள் ஆகியோரின் மின்னிலக்கமயமாதல் முயற்சி களுக்கு உதவ, அவர்களுடன் நிலையம் கூட்டாகச் செயல்படும்.
திட்டத்தின்கீழ் இயந்திரங்கள் மட்டும் நடத்தும் இரண்டு கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. பொதுமக்களுக்கு அவை படிப்படியாக திறந்துவிடப்படும் என்றது தெமாசெக் பலதுறைத் தொழில்கல்லூரி.

