எண்ணெய் சுத்திகரிப்பு மையமாகத் திகழும் சிங்கப்பூர், அதற்குப் பதிலாக பசுமையான எதிர்காலத்துக்குத் தயாராகி வருகிறது.
சிங்கப்பூரின் புக்கோம் தீவில் உள்ள ராயல் டச் ஷெல் நிறுவனத்தின் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் சுத்திகரிப்புப் பணிகள் பாதியாகக் குறைக்கப்படும் என்று கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்டது.
சிங்கப்பூரின் பொருளியலுக்கு இந்த சுத்திகரிப்பு ஆலை ஏறத்தாழ கடந்த 60 ஆண்டுகளாக மிகவும் முக்கியமானதாக இருந்து வருகிறது.
சிங்கப்பூர் தனிநாடான பிறகு, நாட்டின் வளர்ச்சிக்கு புக்கோம் தீவில் உள்ள எண்ணெய் சுத்தி
கரிப்பு நிலையம் முக்கிய பங்கு வகித்து வருகிறது.
அங்கு சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் சரக்குக் கப்பல்களுக்குப் பயன்படுத்தப்படுகிறது.
இதனால் பில்லியன் கணக்கான முதலீடுகளை இது ஈர்த்துள்ளது. பிளாஸ்டிக் பொருட்களிலிருந்து எண்ணெய் துரப்பண மேடை கட்டு மானம், நிதித்துறை வரை வர்த்தகங்கள் செழித்தோங்குகின்றன.
எரிசக்தி, ரசாயனத் துறை
களால் சிங்கப்பூர் பெரிதும் மேம்பட்டுள்ளது. இவற்றிலிருந்து முழுமையாக விலகிச் செல்லாமல் இருப்பது முக்கியம்.
"ஆனால் இதிலிருந்து உருமாறு வதில் கவனம் செலுத்த வேண்டும்," என்று மனிதவள அமைச்சரும் வர்த்தக, தொழில் இரண்டாம் அமைச்சருமான டான் சீ லெங் குறிப்பிட்டார்.
இதனை முன்னிட்டு சிங்கப்பூர் பசுமைத் திட்டம் 2030ஐ அரசாங்கம் இவ்வாண்டு வெளியிட்டது.
பசுமை நிதி, கரிம வெளியேற்றத்தைக் குறைத்தல் போன்றவற்றுக்கான வட்டார மையமாக சிங்கப்பூரை உருவாக்க இத்திட்டம் பாதை வகுக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரிம வெளியேற்றத்தைக் குறைக்கும் உலகளாவிய மையத்தை அமைப்பதற்குத் தேவையான திட்டத்தை தெமாசெக் ஹோல்டிங்ஸ், சிங்கப்பூர் பங்குச் சந்தை, ஸ்டாண்டர்ட் சார்டர்ட் வங்கி, டிபிஎஸ் குழுமம் ஆகியவை கடந்த மே மாதம் அறிவித்தன.
திறன்மிக்க ஊழியரணியை வழங்கும் நவீனத் தளமாக சிங்கப்பூர் விளங்குகிறது.
இங்கிருந்து புதிய எதிர்சக்தி நிறுவனங்கள் செயல்பட்டு வட்டார நாடுகளில் அவற்றின் வர்த்தகங்
களைப் பார்த்துக்கொள்ளலாம்.

