பசுமையான எதிர்காலத்துக்கு தயாராகும் சிங்கப்பூர்

பசுமையான எதிர்காலத்துக்கு தயாராகும் சிங்கப்பூர்

2 mins read
e69a042a-3838-4e71-833c-f9e5e9caced2
-

எண்­ணெய் சுத்­தி­க­ரிப்பு மைய­மாகத் திக­ழும் சிங்­கப்­பூர், அதற்­குப் பதி­லாக பசு­மை­யான எதிர்­கா­லத்­துக்­குத் தயா­ராகி வரு­கிறது.

சிங்­கப்­பூ­ரின் புக்­கோம் தீவில் உள்ள ராயல் டச் ஷெல் நிறு­வ­னத்­தின் எண்­ணெய் சுத்­தி­க­ரிப்பு ஆலை­யில் சுத்­தி­க­ரிப்­புப் பணி­கள் பாதி­யா­கக் குறைக்­கப்­படும் என்று கடந்த ஆண்டு அறி­விக்­கப்­பட்­டது.

சிங்­கப்­பூ­ரின் பொரு­ளி­ய­லுக்கு இந்த சுத்­தி­க­ரிப்பு ஆலை ஏறத்­தாழ கடந்த 60 ஆண்­டு­க­ளாக மிக­வும் முக்­கி­ய­மா­ன­தாக இருந்து வரு­கிறது.

சிங்­கப்­பூர் தனி­நா­டான பிறகு, நாட்­டின் வளர்ச்­சிக்கு புக்­கோம் தீவில் உள்ள எண்­ணெய் சுத்­தி­

க­ரிப்பு நிலை­யம் முக்­கிய பங்கு வகித்து வரு­கிறது.

அங்கு சுத்­தி­க­ரிக்­கப்­பட்ட எண்­ணெய் சரக்­குக் கப்­பல்­க­ளுக்­குப் பயன்­ப­டுத்­தப்­ப­டு­கிறது.

இத­னால் பில்­லி­யன் கணக்­கான முத­லீ­டு­களை இது ஈர்த்­துள்­ளது. பிளாஸ்­டிக் பொருட்­க­ளி­லி­ருந்து எண்­ணெய் துரப்­பண மேடை கட்டு மா­னம், நிதி­த்துறை வரை வர்த்­த­கங்­கள் செழித்­தோங்­கு­கின்­றன.

எரி­சக்தி, ரசா­ய­னத் துறை­

க­ளால் சிங்­கப்­பூர் பெரி­தும் மேம்­பட்­டுள்­ளது. இவற்­றி­லி­ருந்து முழு­மை­யாக வில­கிச் செல்­லா­மல் இருப்­பது முக்­கி­யம்.

"ஆனால் இதி­லி­ருந்து உரு­மாறு ­வ­தில் கவ­னம் செலுத்த வேண்­டும்," என்று மனி­த­வள அமைச்­ச­ரும் வர்த்தக, தொழில் இரண்­டாம் அமைச்­ச­ரு­மான டான் சீ லெங் குறிப்­பிட்­டார்.

இதனை முன்­னிட்டு சிங்­கப்­பூர் பசு­மைத் திட்­டம் 2030ஐ அர­சாங்­கம் இவ்­வாண்டு வெளி­யிட்­டது.

பசுமை நிதி, கரிம வெளி­யேற்­றத்­தைக் குறைத்­தல் போன்­ற­வற்­றுக்­கான வட்­டார மைய­மாக சிங்­கப்­பூரை உரு­வாக்க இத்­திட்­டம் பாதை வகுக்­கும் என்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

கரிம வெளி­யேற்­றத்­தைக் குறைக்­கும் உல­க­ளா­விய மையத்தை அமைப்­ப­தற்­குத் தேவை­யான திட்­டத்தை தெமா­செக் ஹோல்­டிங்ஸ், சிங்­கப்­பூர் பங்­குச் சந்தை, ஸ்டாண்­டர்ட் சார்­டர்ட் வங்கி, டிபி­எஸ் குழு­மம் ஆகி­யவை கடந்த மே மாதம் அறி­வித்­தன.

திறன்­மிக்க ஊழி­ய­ர­ணியை வழங்­கும் நவீ­னத் தள­மாக சிங்­கப்­பூர் விளங்­கு­கிறது.

இங்­கி­ருந்து புதிய எதிர்­சக்தி நிறு­வ­னங்­கள் செயல்­பட்டு வட்­டார நாடு­களில் அவற்­றின் வர்த்­த­கங்­

க­ளைப் பார்த்­துக்­கொள்­ள­லாம்.