பணவீக்கம் தொடர்பான எதிர்பார்ப்புகளில் அதிக மாற்றமில்லை

பணவீக்கம் தொடர்பான எதிர்பார்ப்புகளில் அதிக மாற்றமில்லை

2 mins read
029e085c-093c-4b52-b7b3-d9653f7415df
-

சிங்­கப்­பூ­ரில் பண­வீக்­கம் இவ்­வாண்டு மாற்றமின்றி இருக்­கும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது. அத்­து­டன், பண­வீக்க விகி­தங்­கள் மீது கொவிட்-19 குறிப்­பி­டத்­தக்க பாதிப்பை ஏற்­ப­டுத்­தும் என்று 'சிண்­டெக்ஸ்' எனப்­படும் சிங்­கப்­பூர் பண­வீக்க எதிர்­பார்ப்­பு­க­ளுக்­கான குறி­யீடு, ஆக அண்­மைய காலாண்­டில் வெளி­யிட்ட தனது கருத்­தாய்வு அறிக்­கை­யில் குறிப்­பிட்­டுள்­ளது.

டிபி­எஸ் வங்­கி­யும் சிங்­கப்­பூர் நிர்­வா­கப் பல்­க­லைக்­க­ழ­க­மும் (எஸ்­எம்யு) இணைந்து வெளி­யிட்ட இந்­தக் கருத்­தாய்­வில் கலந்­து­கொள்ள சிங்­கப்­பூர் குடு­ம்பங்­க­ளைப் பிர­தி­நிதிக்கும் கிட்­டத்­தட்ட 500 தனி­

ந­பர்­கள் தேர்ந்­தெ­டுக்­கப்­பட்­ட­னர். ஒட்­டு­மொத்த பண­வீக்க எதிர்­பார்ப்பு­ கள் மார்ச் மாதத்­திற்­கும் ஜூன் மாதத்­திற்­கும் இடையே மாற­வில்லை. இது, 2012ஆம் ஆண்டு முத­லான ஆண்­டு­க­ளின் இரண்­டாம் காலாண்­டில் பதி­வா­கும் சரா­சரி விகி­த­மான 3.3 விழுக்­காட்­டைக் காட்­டி­லும் குறை­வாக உள்­ளது.

இந்த விகி­தம் கடந்­தாண்டு செப்­டம்­பர் முத­லான காலாண்­டு

­க­ளின்­போது ஏறு­மு­க­மாக இருந்­த­போ­தும் தற்­போது குறைந்­துள்­ளது.

இரண்­டாம் கட்டத் தளர்வு நட­

வ­டிக்கை, மூன்­றாம் கட்டத் தளர்வு நட­வ­டிக்கை (உச்­சக்­கட்ட எச்­ச­ரிக்கை நிலை) ஆகி­ய­வற்­றின்­கீ­ழான கடு­மை­யாக்­கப்­பட்ட பொதுச் சுகா­தார நட­வ­டிக்­கை­களும் கொரோனா கிரு­மி­யின் புதிய உரு­மாற்­றங்­களும் சிங்­கப்­பூ­ரின் தடுப்­பூசி விநி­யோக நட­வ­டிக்­கை­யால் ஏற்­பட்­டுள்ள நற்

­ப­லன்­கள் மட்­டுப்­ப­டுத்­தி­யுள்­ள­தாக டிபி­எஸ் வங்­கி­யும் எஸ்­எம்­யு­வும் அறிக்கை ஒன்­றில் தெரி­வித்­தன.

கொவிட்-19 பண­வீக்­கத்­தின்­மீது தாக்­கத்தை ஏற்­ப­டுத்­தும் என்று கருத்­தாய்­வில் பதி­ல­ளித்­தோ­ரில் 70 விழுக்­காட்­டி­னர் தெரி­வித்­தனர். இந்த விகி­தம் மார்ச் மாத ஆய்­வ­றிக்­கை­யில் 67 விழுக்­கா­டாக இருந்­தது.

பண­வீக்­கத்­தின்­மீது கொவிட்-19 நீண்ட கால தாக்­கத்தை ஏற்­ப­டுத்­தும் என எதிர்­பார்ப்­போ­ரின் விகி­தம் மார்ச் மாதத்­தில் இருந்த 67 விழுக்­காட்­டி­லி­ருந்து ஜூன் மாதத்­தில் 73 விழுக்­காட்­டுக்கு உயர்ந்­தது.

பண­வீக்­கம் இவ்­வாண்­டின்­போது சற்று மித­மான பிறகு அது குறித்த எதிர்­பார்ப்­பு­கள் சீர­டைந்­தி­ருக்­க­லாம் என்­றும் பொரு­ளி­யல் மெல்ல திறப்­பது, தடுப்­பூசி முறை மீது வாடிக்­கை­யா­ளர்­க­ளின் நம்­பிக்கை கூடி­யது ஆகி­யவை கார­ணம் என்­றும் டாக்­டர் டைமுர் பய்க் தெரி­வித்­தார்.

"பொரு­ளி­ய­லின் திறப்­பிற்­கான காலம் மற்­றும் அளவு குறித்­துத் தொட­ரும் நிச்­சய­மின்­மையை இது பிர­தி­ப­லித்­தி­ருக்­கக்­கூ­டும்.

சம்­ப­ளம், விலை­வாசி மற்­றும் வாடிக்­கை­யா­ள­ர் தேவை­யின்

அதி­க­ரிப்பை இது பாதிக்­க­லாம்," என்று டாக்­டர் பய்க் கூறி­னார். திருத்­தப்­பட்ட பண­வீக்க எதிர்­பார்ப்­பு­க­ளின் விகி­தம் மார்ச் மாதத்­தில் இருந்த 3.1 விழுக்­காட்­டி­லி­ருந்து ஜூன் மாதத்­தில் 3 விழுக்­காட்­டுக்கு குறைந்­தது.

ஒட்­டு­மொத்­த­மாக பண­வீக்­கம் தொடர்­பான எதிர்­பார்ப்­பு­கள் அவ்­வ­ள­வாக மாற­வில்லை என்று

டிபி­எஸ்ஸும் தெரி­வித்­தது.

கேளிக்கை, கலா­சா­ரம், ஆடை­கள், காலணி மற்­றும் இதர பொருட்­க­ளின் மீதான பண­வீக்க எதிர்­பார்ப்­பு­கள் குறைந்­துள்­ளன.

இதற்கு நேர்­மா­றாக வீட்­டுப்­பொ­ருட்­கள் மற்­றும் சேவை­கள் மீதான எதிர்­பார்ப்­பு­கள் அதி­க­ரித்­துள்­ளன.