'சீக்கா தொடர்பான எங்கள் நிலைப்பாடு இன அடிப்படையிலானதல்ல'

'சீக்கா தொடர்பான எங்கள் நிலைப்பாடு இன அடிப்படையிலானதல்ல'

1 mins read
d96ff82d-56d7-4db1-9b72-c2472fd5bbc3
-

சீக்கா எனப்­படும் சிங்­கப்­பூர் - இந்­தியா இடை­யி­லான விரி­வான பொரு­ளி­யல் ஒத்­து­ழைப்பு உடன்­பாடு தொடர்­பான தனது நிலைப்­பாடு இன அடிப்­ப­டை­யா­ன­தல்ல என்று சிங்­கப்­பூர் முன்­னேற்­றக் கட்சி தெரி­வித்­துள்­ளது.

மாறாக, உள்­ளூர் நிபு­ணர்­கள், மேலா­ளர்­கள், நிர்­வா­கி­கள், தொழில்­நுட்­பர்­கள் ஆகி­யோ­ரின் வேலை­

க­ளைப் பற்­றி­யது என்று அது கூறி­யது.

"சிங்­கப்­பூ­ரர்­கள் நியா­ய­மான வகை­யில் நடத்­தப்­பட வேண்­டும். அவர்­க­ளது வேலை­களும் சம்­ப­ள­மும் பாது­காக்­கப்­பட வேண்­டும். இவற்­றில்­தான் நாங்­கள் கவ­னம் செலுத்­து­கிறோம்.

"அனைத்து சிங்­கப்­பூ­ரர்­க­ளு­டனும் சிங்­கப்­பூர் முன்­னேற்­றக் கட்சி ஒற்­று­மை­யு­டன் இருக்­கிறது.

"அனைத்து சிங்­கப்­பூ­ரர்­க­ளுக்­கா­க­வும் நாங்­கள் குரல் கொடுப்­போம். சிங்­கப்­பூ­ரின் அடிப்படைப் பண்­பு­நெ­றி­க­ளைப் பாது­காப்­பது, மேம்­ப­டுத்­து­வது ஆகி­ய­வற்­றுக்­குத் தொடர்ந்து நாங்­கள் முக்­கி­யத்­து­வம் கொடுப்­போம்.

"சிங்­கப்­பூ­ரின் எதிர்­கா­லத்­தில் கவ­னம் செலுத்­து­வோம்," என்று சிங்­கப்­பூர் முன்­னேற்­றக் கட்சி தெரி­வித்­தது.