சிரியாவில் பயங்கரவாதத் தாக்குதல்களை அரங்கேற்ற நிதியளித்ததாகக் குற்றச்சாட்டு

சிரியாவில் பயங்கரவாதத் தாக்குதல்களை அரங்கேற்ற நிதியளித்ததாகக் குற்றச்சாட்டு

2 mins read
3c421a75-8374-4d14-9999-9ee2dbedbf27
-

சிரி­யா­வில் பயங்­க­ர­வா­தத் தாக்­கு­தல்­க­ளுக்கு நிதி­யு­தவி அளித்­த­தாக சிங்­கப்­பூர்த் தொழி­ல­தி­பர் ஒரு­வர்­மீது மாவட்ட நீதி­மன்­றத்­தில் குற்­றம் சாட்­டப்­பட்­டது.

முகம்­மது கஸாலி சாலே, 50, என்ற அவர்­மீது மூன்று குற்­றச்­சாட்­டு­கள் சுமத்­தப்­பட்­டுள்­ளன. தன்­மீ­தான குற்­றச்­சாட்­டு­களை அவர் ஒப்­புக்­கொள்ள இருப்­ப­தா­க­வும் தன் சார்­பில் வாதாட வழக்­கறி­ஞர் ஒரு­வரை நிய­மிக்க இருப்­ப­தா­க­வும் நீதி­மன்­றத்­தில் தெரி­விக்­கப்­பட்­டது.

தற்­போ­து அவர் உள்­நாட்­டுப் பாது­காப்­புச் சட்­டத்­தின்­கீழ் கைது­செய்­யப்­பட்­டுள்­ளார்.

கஸா­லிக்­குப் பிணை வழங்­கக்­கூ­டாது என்று அர­சுத் தரப்பு வழக்­கறி­ஞர் கேட்­டுக்­கொண்­டார். அவ­ருக்­குப் பிணை வழங்­கு­வது சிங்­கப்­பூ­ரின் பாது­காப்­பிற்கு அச்­சு­றுத்­த­லாக இருக்­கும் என்­றும் அவ­ரைத் தடுத்து வைக்க சிறப்பு ஏற்­பா­டு­கள் செய்­யப்­பட்டு வரு­கின்­றன என்­றும் அர­சுத் தரப்பு குறிப்­பிட்­டது. இதை­ அடுத்து, கஸா­லிக்­குப் பிணை வழங்­கப்­ப­ட­வில்லை. அவர்­மீ­தான வழக்கு ஆகஸ்ட் 11ஆம் தேதி மீண்­டும் விசா­ர­ணைக்கு வரும்.

கடந்த 2013 டிசம்­பர் மாதத்­திற்­கும் 2014ஆம் ஆண்டு தொடக்­கப் பகு­திக்­கும் இடை­யில், சிரி­யா­வில் பயங்­க­ர­வா­தச் செயல்­களை அரங்­கேற்­றப் பயன்­ப­டுத்­திக்­கொள்­ளும் நோக்­கத்­து­டன் வான் முகம்­மது அக்­கெல் வான் ஸைனல் அபி­தின் என்­ப­வர்க்கு கஸாலி பணம் கொடுத்­த­தா­கச் சந்­தே­கிக்­கப்­ப­டு­கிறது என்று நீதி­மன்ற ஆவ­ணங்­கள் கூறின.

ஒரு­முறை, ஜோகூர் பாரு பேருந்து முனை­யத்­தில் அபி­தி­னி­டம் 1,000 மலே­சிய ரிங்­கிட் பணம் கொடுத்­த­தாக கஸா­லி­மீது குற்­றம் சாட்­டப்­பட்­டுள்­ளது. வேறு இரு வேளை­களில் 'வெஸ்­டர்ன் யூனி­யன்' மூல­மாக முறையே அவர் 351.75 அமெ­ரிக்க டால­ரை­யும் ஐந்­நூறு ரிங்­கிட்­டை­யும் அனுப்­பி­ய­தாகச் சந்­தே­கிக்­கப்­ப­டு­கிறது.

பயங்­க­ர­வா­தத்­திற்கு நிதி வழங்கு­வ­தைத் தடுக்­கும் நோக்­கில், கடந்த 2002ஆம் ஆண்டு பயங்­க­ர­வாத (நிதி வழங்­கு­தலை ஒடுக்­கு­தல்) சட்­டம் இயற்­றப்­பட்­டது. குற்­றம் மெய்ப்பிக்கப்பட்டால், ஒவ்­வொரு குற்­றத்­திற்­கும் கஸா­லிக்­குப் பத்து­ ஆண்­டு­வரை சிறை அல்­லது $500,000 வரை அப­ரா­தம் அல்­லது இவ்­விரு தண்­ட­னை­களும் விதிக்­கப்­ப­ட­லாம்.

கடந்த 2018 டிசம்­ப­ரில் மலே­சி­யா­வில் கஸாலி கைது­செய்­யப்­பட்­ட­தாக உள்­துறை அமைச்சு நேற்று ஓர் அறிக்கை வாயி­லா­கத் தெரி­வித்­தது. அதன்­பி­றகு அவர் சிங்­கப்­பூ­ருக்கு நாடு­க­டத்­தப்­பட்டு, ஐஎஸ்­ஐ­எஸ் அமைப்­பிற்­குத் துணை­நின்­ற­தற்­காக 2019 ஜன­வ­ரி­யில் உள்­நாட்­டுப் பாது­காப்­புச் சட்­டத்­தின்­கீழ் அவர்­மீது தடுப்­புக்­கா­வல் ஆணை பிறப்­பிக்­கப்­பட்­ட­தாக அந்த அறிக்கை குறிப்­பிட்­டது.

சிரி­யா­வில் மிக முக்­கி­ய­மான ஐஎஸ் போரா­ளி­யாக இருந்­த­தாக நம்­பப்­பட்ட மலே­சி­யா­வின் வான் அக்­கெல், பின்­னர் 2019 மார்ச்­சில் இறந்­து­விட்­ட­தா­கக் கூறப்­பட்­டது. அவ­ரு­டன் கஸாலி மிக நெருக்­க­மாக இருந்­தார் என்று அமைச்சு தெரி­வித்­துள்­ளது.

குற்­றச்­சாட்­டு­கள் மெய்ப்­பிக்­கப்­பட்­டால், கஸாலி மீதான தடுப்­புக்­கா­வல் ஆணை அகற்­றப்­படும் என்­றும் அதன்­பின் நீதி­மன்­றம் விதிக்­கும் தண்­ட­னையை அவர் அனு­பவிப்­பார் என்­றும் கூறப்­பட்­டது.