பிரதமர் லீ சியன் லூங், ரிவர் வேலி ஹை பள்ளியில் கொல்லப்பட்ட 13 வயது மாணவரின் குடும்பத்திற்கு தமது அனுதாபங்களைத் தெரிவித்துள்ளார்.
இன்று வெளியிட்ட தமது பேஸ்புக் பதிவில் பிரதமர் லீ திகைப்பை வெளிப்படுத்தினார்: "என்ன நடந்தது என்பதை எங்களால் புரிந்துகொள்ள முடியவில்லை. எங்களால் புரிய முடியாததால் சொல்லவும் வார்த்தைகள் இல்லை."
கொல்லப்பட்ட மாணவனின் குடும்பம் படும் துயரத்தை நினைத்துப் பார்க்கவே முடியவில்லை என்று குறிப்பிட்டார் திரு லீ.
பள்ளி ஆசிரியர்களும் மாணவர்களும் அதிர்ச்சியில் இருப்பதாகக் கூறிய திரு லீ, "இந்த இருட்டான சூழலைக் கடந்து செல்ல நாம் அனைவரும் உதவி செய்வோம். நடந்ததை ஏற்றுக்கொள்ள நாங்கள் கைகொடுப்போம்," என்று கூறினார்.
பிரதமர் லீ, போலிசாரின் விசாரணை முடியும்வரை பொதுமக்களைப் பொறுத்திருக்குமாறு கேட்டுக்கொண்டார்.
"அனுமானம், வதந்திகள் மூலம் குடும்பங்களின் அதிர்ச்சியையும் துயரத்தையும் மோசமாக்கிவிட வேண்டாம்," என்றார் பிரதமர் லீ

