பள்ளிகள் தொடர்ந்து செயல்படும்: அமைச்சர் வோங்

பள்ளிகள் தொடர்ந்து செயல்படும்: அமைச்சர் வோங்

1 mins read
ba8773d9-3947-451f-92df-564a124a8157
-

கொவிட்-19 கிருமித்தொற்றுச் சம்பவங்களின் எண்ணிக்கை தற்போது கூடியிருந்தாலும் பள்ளிகள் தொடர்ந்து செயல்படும் என நிதியமைச்சர் லாரன்ஸ் வோங் இன்று தெரிவித்தார். அண்மைய கிருமித்தொற்றுகள் பள்ளிகளில் நிகழவில்லை என அவர் குறிப்பிட்டார்.

கிருமிப்பரவலைக் கையாள்வதற்கான அமைச்சர்நிலை பணிக்குழுவை வழிநடத்தும் திரு வோங், "பள்ளிகளைப் பொறுத்தவரையில் நாங்கள் மிகவும் கடுமையான வழிமுறைகளையும் பாதுகாப்பு நிர்வாக நடவடிக்கைகளையும் செயல்படுத்தியுள்ளோம். வகுப்பறைகளில் உறவாடலைக் குறைக்கவும் பள்ளியில் கிருமிப்பரவல் இல்லாமல் இருப்பதை உறுதிசெய்யவும் இது வகைசெய்யும்," என்று அவர் கூறினார்.

"இக்காலக்கட்டத்தின் பெரும்பாலன நாட்களில் பள்ளிகளை எங்களால் திறந்து வைத்திருக்க முடிந்தது. மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் கற்றலை எங்களால் பாதுகாப்புடன் தொடர்ந்து வைத்திருக்க முடிகிறது,"

பள்ளிகள் மூடப்படுமா என்று செய்தியாளர் கூட்டத்தில் கேட்கப்பட்டபோது திரு வோங் அவ்வாறு பதிலளித்தார். பிற நாடுகளில் பள்ளிகளின் மூடல் மாணவரின் கல்வியை பாதித்திருப்பதைச் சுட்டிய திரு வோங், மாணவர்களின் கற்றலும் மனித வளமும் நிரந்தரமாக பாதிக்கப்படலாம் என்றும் இதனைத் தவிர்க்க அரசாங்கம் மிகக் கடுமையாக முயன்று வருவதாகவும் திரு வோங் கூறினார்.