பிரதமர்: பரிசோதனையே மிக முக்கியமான உத்தி

பிரதமர்: பரிசோதனையே மிக முக்கியமான உத்தி

1 mins read
6962bcc1-f541-4392-9492-599b2eff85a9
-

சிங்கப்பூரில் கொவிட்-19க்கு எதிரான போராட்டத்தில் காலக்கிரம முறைப்படி பரிசோதனை செய்து கொள்வதே முக்கியமான உத்தியாகும் என்று பிரதமர் லீ சியன் லூங் ஃபேஸ்புக்கில் தெரிவித்தார்.

கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள சந்தைகள், உணவங்காடி நிலையங்களுக்கு அருகில் வசிக்கும் பல குடியிருப்பாளர்கள் சுயபரிசோதனை சாதனத்தைப் பெற்றுக்கொண்டதை டெக் கீ, செங் ஷான் ஆகிய இடங்களில் தான் கண்டதாக பிரதமர் குறிப்பிட்டார். இது தமக்கு மகிழ்ச்சி அளிப்பதாகவும் அவர் கூறினார்.

ஒட்டுமொத்தமாகப் பார்க்கையில் இந்தப் போராட்டத்தில் நாம் நல்ல முன்னேற்றம் கண்டு வருவதாகக் குறிப்பிட்ட அவர், மக்கள்தொகையில் மூன்றில் ஒரு பங்கினர் குறைந்தபட்சம் ஒரு தடுப்பூசியைப் போட்டுக்கொண்டிருப்பதைச் சுட்டினார். பாதிப் பேர் இரண்டு தடுப்பூசிகளையும் போட்டுக்கொண்டுள்ளனர்.

"ஆறு மாதத்திற்கு முன்பு இருந்ததைவிட இப்போது நாம் மிகவும் பாதுகாப்பான நிலையில் இருக்கிறோம். எல்லாம் நல்லபடி நடந்தால் இன்னும் நான்கு வாரங்களில் நம்முடைய தடுப்பூசி இயக்கம் மேலும் விரிவடைந்து இருக்கும். சில கட்டுப்பாடுகளை நாம் தளர்த்த முடியும்," என்று பிரதமர் குறிப்பிட்டு உள்ளார்.

கேடிவி, ஜூரோங் மீன்பிடித் துறைமுக தொற்றுக் குழுமங்கள் துரதிருஷ்டவசமாக பல சந்தைகளுக்கும் உணவங்காடிகளுக்கும் பரவி இருப்பதாகக் குறிப்பிட்ட பிரதமர், இதன் காரணமாகவே கடுமையான கட்டுப்பாடுகள் நடப்புக்கு வருவதாக தெரிவித்தார்.