தேசிய நாள் பேரணி திட்டமிட்டப்படி நடக்கும். தேவையான அனைத்து பாதுகாப்பு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளும் முற்றிலும் கடைப்பிடிக்கப்படுகின்றன என்பதை உறுதிப்படுத்தும் வகையில் அணிவகுப்பின் அளவை தற்காப்பு அமைச்சு மறுபரிசீலனை செய்து வருகிறது.
நிதி அமைச்சர் லாரன்ஸ் வோங் இன்று இதனை அறிவித்தார். ஆகஸ்ட் 9ஆம் தேதி தேசிய நாள் கொண்டாடப்படுகிறது. இது மிக முக்கியமான தேசிய நிகழ்ச்சியாகும். ஆகையால் அணிவகுப்பு திட்டமிட்டப்படி நடக்கும் என்று திரு வோங் இன்று செய்தியாளர் களிடம் குறிப்பிட்டார்.
தற்காப்பு அமைச்சு பேரணியை நடத்தும் விதத்தையும் அளவையும் தேவையான அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும் பற்றி மறுபரிசீலனை செய்து வருகிறது. இதன் தொடர்பில் புதிய விவரங்களைத் தற்காப்பு அமைச்சு அறிவிக்கும் என்று அமைச்சர் குறிப்பிட்டார்.
இன்று கொவிட்-19 சிறப்புப் பணிக்குழு மெய்நிகர் செய்தியாளர் கூட்டத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு அளித்த பதிலில் அமைச்சர் இந்த விவரங்களைத் தெரிவித்தார்.

