அமைச்சர்: பள்ளிக்கூடங்கள் தொடர்ந்து செயல்படும்

அமைச்சர்: பள்ளிக்கூடங்கள் தொடர்ந்து செயல்படும்

2 mins read
b0fff975-6851-49d7-b69c-bb06345f525f
சிங்கப்பூரில் கொவிட்-19 தொற்று அதிகரித்துள்ள போதிலும் பள்ளிக்கூடங்கள் தொடர்ந்து செயல்படும். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

அண்மைய தொற்றுகளுக்கும் பள்ளிக்கூடங்களுக்கும் தொடர்பு இல்லை என விளக்கம்

சிங்­கப்­பூ­ரில் கொவிட்-19 சமூ­கத்­தொற்று அதி­க­ரித்து இருக்­கிறது என்­றா­லும் பள்­ளிக்­கூ­டங்­கள் தொடர்ந்து செயல்­படும் என்று நிதி அமைச்­சர் லாரன்ஸ் வோங் அறி­வித்­தார்.

அண்­மைய தொற்­று­க­ளுக்­கும் பள்­ளிக்­கூட அடிப்­ப­டை­யி­லான தொற்­றுக்­கும் தொடர்பு இல்லை என்­பதை அவர் சுட்­டிக்­காட்­டி­னார்.

பல அமைச்­சு­களை உள்­ளடக்கிய கொவிட்-19 சிறப்­புப் பணிக்­கு­ழு­வின் இணைத் தலை­வர்­களில் ஒரு­வ­ரான திரு வோங் நேற்று செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசி­னார்.

"பள்­ளிக்­கூ­டங்­க­ளைப் பொறுத்த வரை­ மிகக் கடு­மை­யான கட்­டுப்­பா­டு­களை முழு­மை­யாக நடை­முறைப்­ப­டுத்தி வரு­கி­றோம். பாது­காப்பு நட­வ­டிக்­கை­களும் அங்கு முழு­மை­யாக இடம்­பெ­று­கின்­றன.

"இதன் மூலம் வகுப்­ப­றை­களில் தொற்று கூடு­மா­ன­வரை குறைக்­கப்­ப­டு­கிறது. பள்­ளிக்­கூ­டங்­களில் தொற்று இல்லை என்று இவற்­றின் மூலம் உறு­திப்­ப­டுத்­தப்­ப­டு­கிறது," என்று அமைச்­சர் விளக்­கி­னார்.

தொற்று காலத்­தின்போது பெரும்­பா­லும் பள்­ளிக்­கூ­டங்­கள் திறந்தே இருந்து வந்­துள்­ள­தற்கு இது கார­ணம் என்­றார் அவர்.

மாண­வர்­க­ளுக்­கும் ஊழி­யர்­களுக்­கும் பாது­காப்பு தொடர்ந்து உறு­திப்­ப­டுத்­தப்­பட்டு வரு­வ­தா­க­வும் அவர் கூறி­னார். கொவிட்-19 சிறப்­புப் பணிக்­குழு நேற்று மெய்­நி­கர் ரீதி­யில் செய்­தி­யா­ளர் மாநாட்டை நடத்­தி­யது.

பள்­ளிக்­கூ­டம் மூடப்­ப­டுமா என்று ஊட­கத்­தி­னர் கேட்­ட­தற்கு அளித்த பதி­லில் அமைச்­சர் இவ்­வாறு தெரி­வித்­தார்.

உல­கின் பல இடங்­க­ளி­லும் பள்­ளிக்­கூ­டங்­கள் அதிக காலத்­திற்கு மூடப்­பட்டு இருப்­பதை சுட்­டிக்­காட்­டிய அமைச்­சர், அதன் கார­ண­மாக மாண­வர்­கள் கற்­ப­தி­லும் மாணவர்­களி­டத்திலும் ஒருவித தாக்­கமும் ஏற்பட்டு இருப்பதாக பல ஆய்­வு­கள் மூலம் தெரி­ய­வந்துள்ளதாக குறிப்­பிட்­டார்.

சிங்­கப்­பூ­ரில் இது­வ­ரை­யில் கிருமி தொற்­றால் பாதிக்­கப்­பட்டு இருக்­கும் மாண­வர்­கள், அவர்­களின் குடும்ப உறுப்­பி­னர்­கள் கார­ண­மாக பாதிக்­கப்­பட்­டார்­களே தவிர பள்­ளிக்­கூ­டங்­களில் அவர்­களுக்குக் கிருமி தொற்­ற­வில்லை என்­றும் அமைச்­சர் தெரிவித்தார்.

ஆகை­யால் இப்­போ­தைய கால­கட்­டத்­தில் பள்­ளிக்­கூ­டங்­கள் தொடர்ந்து செயல்­படும் என்று அமைச்­சர் குறிப்­பிட்­டார்.

பள்­ளிக்­கூ­டங்­களில் பாது­காப்பு நட­வ­டிக்­கை­கள் கடு­மை­யா­கப் பின்­பற்­றப்­ப­டு­வதை கல்வி அமைச்சு தொடர்ந்து உறு­திப்­ப­டுத்­தும் என்­றும் அவர் தெரி­வித்­தார்.