பிரதமர்: பரிசோதனையே மிக முக்கியமான உத்தி

பிரதமர்: பரிசோதனையே மிக முக்கியமான உத்தி

1 mins read
a9e0b7da-8140-4c35-be92-9aca10084724
-

சிங்­கப்­பூ­ரில் கொவிட்-19க்கு எதி­ரான போராட்­டத்­தில் காலக்­கி­ரம முறைப்­படி பரி­சோ­தனை செய்து கொள்­வதே முக்­கி­ய­மான உத்­தி­யா­கும் என்று பிர­த­மர் லீ சியன் லூங் ஃபேஸ்புக்­கில் தெரி­வித்தார்.

கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­பட்டுள்ள சந்­தை­கள், உண­வங்­காடி நிலை­யங்­க­ளுக்கு அரு­கில் வசிக்­கும் பல குடி­யி­ருப்­பா­ளர்­கள் சுய­ப­ரி­சோ­தனை சாதனத்தைப் பெற்­றுக்­கொண்­டதை டெக் கீ, செங் ஷான் ஆகிய இடங்களில் தான் கண்­ட­தாக பிர­த­மர் குறிப்­பிட்­டார். இது தமக்கு மகிழ்ச்சி அளிப்­ப­தா­க­வும் அவர் கூறி­னார்.

ஒட்­டு­மொத்­த­மா­கப் பார்க்­கை­யில் இந்­தப் போராட்­டத்­தில் நாம் நல்ல முன்­னேற்­றம் கண்டு வரு­வ­தா­கக் குறிப்­பிட்ட அவர், மக்­கள்­தொ­கை­யில் மூன்­றில் ஒரு பங்­கி­னர் குறைந்­த­பட்­சம் ஒரு தடுப்­பூ­சி­யைப் போட்­டுக்கொண்­டி­ருப்­பதைச் சுட்­டி­னார். பாதிப்­ பேர் இரண்டு தடுப்­பூ­சி­க­ளை­யும் போட்­டுக்கொண்டுள்ளனர்.

"ஆறு மாதத்­திற்கு முன்பு இருந்­த­தை­விட இப்­போது நாம் மிக­வும் பாது­காப்­பான நிலை­யில் இருக்­கி­றோம். எல்­லாம் நல்­ல­படி நடந்­தால் இன்­னும் நான்கு வாரங்­களில் நம்­மு­டைய தடுப்­பூசி இயக்­கம் மேலும் விரி­வ­டைந்து இருக்­கும். சில கட்­டுப்­பா­டு­களை நாம் தளர்த்த முடி­யும்," என்று பிர­த­மர் குறிப்­பிட்டு உள்­ளார்.

கேடிவி, ஜூரோங் மீன்­பி­டித் துறை­முக தொற்­றுக் குழு­மங்­கள் துர­தி­ருஷ்­ட­வ­ச­மாக பல சந்­தை­களுக்­கும் உண­வங்­கா­டி­க­ளுக்­கும் பரவி இருப்­ப­தா­கக் குறிப்­பிட்ட பிர­த­மர், இதன் கார­ண­மா­கவே கடு­மை­யான கட்­டுப்­பா­டு­கள் நடப்­புக்கு வரு­வ­தாக தெரி­வித்­தார்.