92% ராணுவ வீரர்களுக்கு முழுமையான தடுப்பூசி

92% ராணுவ வீரர்களுக்கு முழுமையான தடுப்பூசி

1 mins read
03aeed9a-eb0e-4374-b39f-fc99ba1538e7
ராணுவ வீரர்களுக்கு 100,000க்கும் மேற்பட்ட கொவிட்-19 தடுப்பூசி போடப்பட்டு உள்ளது. படம்: தற்காப்பு அமைச்சு/ஃபேஸ்புக் -

கொவிட்-19 தடுப்­பூசி போட்­டுக்­கொண்ட சிங்­கப்­பூர் ஆயு­தப்­படை வீரர்­க­ளி­டையே நான்கு பேருக்கு கடு­மை­யான பாதிப்பு ஏற்­பட்­ட­தாக தற்­காப்பு அமைச்சு நேற்று தெரி­வித்­தது.

அந்த நால்­வ­ருக்­கும் குறித்த நேரத்­தில் முறை­யான மருத்­துவ கவ­னிப்பு இடம்­பெற்­ற­தா­க­வும் அவர்­கள் இப்­போது நல்ல உடல்­நலத்­து­டன் இருப்­ப­தா­க­வும் அமைச்சு குறிப்பிட்டது.

தேசிய அள­வில் இடம்­பெ­றும் தடுப்­பூசி தொடர்­பான பாதக விளை­வு­க­ளைப் பற்றி தெரி­விக்க வேண்­டிய தேவை இருப்­ப­தை­யொட்டி அச்சம்பவங்கள் பற்றிய ஏற்­பு­டைய தக­வல்­கள், சுகா­தார அறி­வி­யல் ஆணை­யத்­தி­டம் தாக்­கல் செய்­யப்­பட்டு இருப்­ப­தா­க­வும் அமைச்சு குறிப்­பிட்­டது.

இத­னி­டையே, ராணுவ வீரர்­களுக்கு 100,000க்கும் மேற்­பட்ட தடுப்­பூ­சி­கள் போடப்­பட்டு இருக்­கின்­றன. அவர்­களில் 92 விழுக்­காட்­டி­னர் முற்­றி­லும் தடுப்­பூசி போட்­டுக்­கொண்டு இருக்­கி­றார்­கள்.

ஜூன் மாதம் முதல் தேசிய சேவைக்­குப் பதி­வோர் ஆட்­சேர்ப்­புக்கு முன்­ன­தாக தடுப்­பூசி போட்­டுக்­கொண்டு இருக்­கி­றார்­கள்.