30 மீன் வியாபாரிகள், உதவியாளர்களுக்கு தொற்று

1 mins read
1bdd078c-de2e-411c-b1d9-2ad3af66deba
-

சிங்­கப்­பூ­ரில் சென்ற வார முடி­வில் கொவிட்-19 பரி­சோ­தனை நடத்­தப்­பட்ட 1,120 மீன் வியா­பா­ரி­கள் மற்­றும் உத­வி­யா­ளர்­களில் 30 பேருக்கு தொற்று இருந்­த­து தெரி­ய­வந்­தது என்று சுகா­தார அமைச்­சர் ஓங் யி காங் நேற்று தெரி­வித்­தார்.

பல அமைச்­சு­களை உள்­ளடக்கிய கொவிட்-19 சிறப்­புப் பணிக்­கு­ழு­வின் மெய்­நி­கர் செய்­தி­யா­ளர் கூட்­டத்­தில் பேசிய அவர், இது­வ­ரை­யில் 28 ஈரச் சந்­தை­கள் மற்­றும் உண­வங்­காடி­கள் ஜூரோங் மீன்­பி­டித் துறைமுக தொற்­றுக் குழு­மத்­து­டன் தொடர்­பு­டை­ய­வை­யாக இருக்­கின்­றன என்று குறிப்­பிட்­டார்.

ஜூரோங் மீன்­பி­டித் துறை­மு­கத்­திற்­குச் சென்­றி­ருந்த ஆயி­ரக்­கணக்­கான மீன் வியா­பா­ரி­கள் அவர்­களின் உத­வி­யா­ளர்­க­ளுக்­கும் தொற்று ஏற்­பட்டு இருக்­க­லாம்.

அவர்­கள் தங்­கள் மீனை விற்க சமூ­கத்தை எட்டி இருப்பார்கள். மீன் வாங்­க­வும் கூட்­டம் அதி­க­மாக இருந்­தது என்­ப­தால் சென்ற வார முடிவு மிக­வும் அச்­சத்தை ஏற்­படுத்­தக்­கூ­டிய ஒன்­றாக இருந்­தது என்­பதை அமைச்­சர் சுட்­டி­னார்.

மீன் விற்­பனையை நிறுத்­தும்­படி யும் பரி­சோ­தனைக்கு உட்­படும்படி­யும் தனி­மைப்­ப­டுத்­திக் கொள்ளும்படி­யும் வியா­பா­ரி­க­ளுக்கு தேசிய சுற்­றுப்­புற வாரி­யம் ஆலோ­சனை கூறி யதை அவர் நினைவுகூர்ந்தார்.