அமைச்சர்: திட்டமிட்டபடி தேசிய நாள் பேரணி நடக்கும்

அமைச்சர்: திட்டமிட்டபடி தேசிய நாள் பேரணி நடக்கும்

1 mins read
35e44c9c-59b3-431c-b373-ce477b64f5d9
-

தேசிய நாள் பேரணி திட்­ட­மிட்டப்படி நடக்­கும். தேவை­யான அனைத்து பாது­காப்பு கட்­டுப்­பாட்டு நட­வ­டிக்­கை­களும் முற்­றிலும் கடைப்­பி­டிக்­கப்­ப­டு­கின்­றன என்­பதை உறு­திப்­ப­டுத்­தும் வகை­யில் அணி­வ­குப்­பின் அளவை தற்­காப்பு அமைச்சு மறு­ப­ரி­சீ­லனை செய்து வரு­கிறது.

நிதி அமைச்­சர் லாரன்ஸ் வோங் நேற்று இதனை அறி­வித்­தார். ஆகஸ்ட் 9ஆம் தேதி தேசிய நாள் கொண்­டா­டப்­ப­டு­கிறது.

இது மிக முக்­கி­ய­மான தேசிய நிகழ்ச்சி­யா­கும்.

ஆகை­யால் அணி­வ­குப்பு திட்­ட­மிட்­டப்­படி நடக்­கும் என்று திரு வோங் நேற்று செய்­தி­யாளர் களிடம் குறிப்­பிட்­டார்.

தற்­காப்பு அமைச்சு பேர­ணியை நடத்­தும் விதத்­தை­யும் அள­வை­யும் தேவை­யான அனைத்து பாது­காப்பு நட­வ­டிக்­கை­க­ளை­யும் பற்றி மறு­ப­ரி­சீ­ல­னை செய்து வரு­கிறது.

இதன் தொடர்­பில் புதிய விவ­ரங்­களைத் தற்­காப்பு அமைச்சு அறி­விக்­கும் என்று அமைச்­சர் குறிப்­பிட்­டார்.

நேற்று கொவிட்-19 சிறப்­புப் பணிக்­குழு மெய்­நி­கர் செய்­தி­யா­ளர் கூட்­டத்­தில் கேட்­கப்­பட்ட கேள்­விக்கு அளித்த பதி­லில் அமைச்­சர் இந்த விவ­ரங்­க­ளைத் தெரி­வித்­தார்.