நிறுவனங்கள், ஊழியர்களுக்கு அரசு ஆதரவு

நிறுவனங்கள், ஊழியர்களுக்கு அரசு ஆதரவு

2 mins read
2a5ae769-a991-4ed0-9c33-8bb3679a9086
நிறுவனங்களுக்கு ஏற்படக்கூடிய சங்கடங்களை அரசாங்கம் புரிந்து கொள்கிறது. அது பல்வேறு நடவடிக்கை களை மறு பரிசீலனை செய்து, சரியாக்கங்களைச் செய்யும் என்று நிதி அமைச்சர் லாரன்ஸ் வோங் தெரிவித்தார்.படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சிங்­கப்­பூ­ரில் ஜூலை 22 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 18 ஆம் தேதி வரை கொவிட்-19 பாது­காப்பு கட்­டுப்­பாடு­கள் கடு­மை­யா­கின்­றன. இத­னால் பாதிக்­கப்­ப­டக்­கூ­டிய நிறு­வனங்­கள், ஊழி­யர்­க­ளுக்கு அர­சாங்க ஆதரவுத் திட்­டத்­தின் மூலம் உதவி கிடைக்­கும் என்று அறி­விக்­கப்­பட்டு உள்­ளது.

ஏற்­கெ­னவே நடப்­புக்கு வந்த இரண்டாம் கட்ட கட்­டுப்­பா­டு­க­ளின்­போது கொடுக்­கப்­பட்­ட­தைப் போல் புதிய உத­வி­கள் இருக்­கும் என்று பல அமைச்­சுகளை உள்­ள­டக்­கிய கொவிட்-19 சிறப்­புப் பணிக்­குழு நேற்று செய்­தி­யா­ளர்­க­ளி­டம் தெரி­வித்­தது.

நிதி அமைச்சு வரும் வாரங்­களில் விவ­ரங்களை அறி­விக்­கும்.

நிறு­வ­னங்­க­ளின் சங்­க­டங்­களை அர­சாங்­கம் புரிந்­து­கொள்­கிறது என்­றும் பல நட­வ­டிக்­கை­க­ளை­யும் அது மறு­ப­ரி­சீ­லனை செய்து இன்­னும் இரண்டு வாரங்­களில் சரி­யாக்­கங்­க­ளைப் பற்றி பரி­சீ­லிக்­கும் என்றும் நிதி அமைச்­சர் லாரன்ஸ் வோங் தெரி­வித்­தார்.

எல்­லாம் சீரா­கி­வி­டும். வியா­பாரம் மறு­ப­டி­யும் தலை­யெ­டுக்­கும் என்று பல நிறு­வ­னங்­கள் நம்பி இருந்த சூழ்­நி­லை­யில், எதிர்­பா­ராத வித­மாக நிலைமை வேறு மாதிரி யாகிவிட்­டது. இத­னால் பல நிறு­வ­னங்­கள் ஏமாற்­ற­ம­டைந்­து­விட்­டன. இதை முற்­றி­லும் புரிந்­து­கொள்­வதாக அமைச்­சர் குறிப்­பிட்­டார்.

சிங்­கப்­பூர் தடுப்­பூசி செயல்­திட்டத்தைத் தீவி­ரப்­ப­டுத்தி வரும் நிலை­யில், நிபந்­த­னை­க­ளைக் கடு­மை­யாக்­கு­வது என்ற முடிவு சிரமமா­னது என்­றும் அவர் தெரி­வித்­தார்.

சிங்­கப்­பூர் தொடர்ந்து தன்­னு­டைய தடுப்­பூசித் திட்­டத்தை நிறை­வேற்றி வரும் என்­றும் பொரு­ளி­யலைத் திறந்­து­வி­டு­வ­தற்­கான திட்­டங்­களைக் குறித்த நேரத்­தில் நிறை­வேற்­றும் இலக்கை அது எட்­டும் என்­றும் அமைச்­சர் கூறி­னார்.

சிங்­கப்­பூர் இதற்கு முன் மே 16ஆம் தேதி முதல் ஏறத்­தாழ ஒரு மாத காலத்­திற்குக் கட்­டுப்­பா­டு­களைக் கடு­மை­யாக்­கி­யது.

அதன் கார­ண­மாக அந்­தக் கால­கட்­டத்­துக்கு $1.2 பில்­லி­யன் கூடுதல் ஆத­ரவை அர­சாங்­கம் வழங்­கி­யது.

அந்த ஆத­ர­வில் சம்­பள மானி­யங்­களும் உள்­ள­டங்­கும். கடும் கட்­டுப்­பா­டு­கள் நடப்­பில் இருந்­த­போது பாதிக்­கப்­பட்ட குறைந்த வரு­மா­னம் முதல் நடுத்­தர வரு­மான ஊழி­யர்­கள் வரை பல­ரும் தற்­கா­லிக கொவிட்-19 மீட்சி மானி­ய­மாக $700 வரை பெற்­ற­னர்.