கட்டுப்பாடுகள்: முக்கியமான மூன்று அம்சங்களில் கவனம்

கட்டுப்பாடுகள்: முக்கியமான மூன்று அம்சங்களில் கவனம்

1 mins read
efda0076-cf8a-4b39-b972-fda056992a0d
-

சிங்­கப்­பூ­ரில் கொவிட்-19 தொற்று சூழ்­நிலை கார­ண­மாக புதிய கட்­டுப்­பா­டு­களை நடப்­புக்­குக் கொண்டு வரு­வது என்று அதி­கா­ரி­கள் முடிவு எடுத்­துள்­ள­னர். இதில் அவர்­கள் மூன்று அம்­சங்­களை மிக முக்­கி­ய­மா­ன­தா­கக் கருதி பரி­சீ­லித்­த­னர்.

மருத்­து­வ­மனை கொள்­ள­ளவு போதிய அள­வுக்கு இருக்­கிறது என்­பதை உறு­திப்­ப­டுத்த வேண்­டும்; தடுப்­பூசி போட்­டுக்­கொள்­ளா­மல் இருக்­கும் முதி­ய­வர்­க­ளின் எண்­ணிக்கை; சமூ­கம் எந்த அளவுக்குத் தொற்­றுக்கு ஆளா­கிறது என்ற நில­வ­ரம் ஆகி­யவை அந்த மூன்ற அம்­சங்­கள் என்று சுகா­தார அமைச்­சர் ஓங் யி காங் நேற்று தெரி­வித்­தார்.

சிங்­கப்­பூ­ரில் 70க்கும் மேற்­பட்ட முதி­ய­வர்­களில் ஏறத்­தாழ 30 விழுக்­காட்­டி­னர் இன்­ன­மும் தடுப்­பூசி போட்­டுக்­கொள்­ளா­மல் இருக்­கி­றார்­கள். இது பெரும் கவ­லை­யாக இருக்­கிறது என்று நேற்று நடந்த செய்­தி­யா­ளர் கூட்­டத்­தில் அவர் கூறி­னார்.

சிங்­கப்­பூ­ரில் 60 மற்­றும் அதற்­கும் அதிக வய­துள்ள ஏறத்­தாழ 200,000 மக்­கள் இன்­ன­மும் தடுப்­பூசி போட்­டுக்­கொள்­ளா­மல் இருக்­கி­றார்­கள். தொற்று ஏற்­படும் பட்­சத்­தில் இவர்­களில் ஏறத்­தாழ ஒவ்­வொ­ரு­வ­ருமே மருத்­து­வ­மனையை நாட வேண்­டி வரும் என்று அமைச்­சர் குறிப்­பிட்­டார்.

இவர்­களில் 10 விழுக்­காட்­டி­ன­ருக்குத் தொற்று ஏற்­பட்­டால் 20,000 பேர் மருத்­து­வ­ம­னை­களில் சேர்­வார்­கள். அவர்­களில் 10 அல்லது 15 விழுக்­காட்­டி­னர் தீவிர கண்­கா­ணிப்­பில் இருக்க வேண்டிய தேவை ஏற்­ப­டக்­கூ­டும் என்­றும் அமைச்­சர் விளக்கினார்.