'சிங்கப்பூரில் மீன்கள் பயன்படுத்த பாதுகாப்பானவை'

'சிங்கப்பூரில் மீன்கள் பயன்படுத்த பாதுகாப்பானவை'

1 mins read
efba0c07-6dd7-4b36-ad91-efd9cfa09dec
-

ஜூரோங் மீன்­பி­டித் துறை­முகத்தில் கொவிட்-19 கிருமி நுழைய இந்­தோ­னீ­சியா அல்­லது இதர மீன்­பி­டிப் பட­கு­கள் கார­ண­மாக இருக்­கக்­கூ­டும் என்­றும் இருந்­தா­லும் சிங்­கப்­பூ­ரில் மீன்­கள் பயன்­ப­டுத்த பாது­காப்­பா­னவை என்றும் மருத்­துவ சேவை­கள் துறை இயக்­கு­நர் கென்­னத் மாக் தெரி­வித்­தார்.

கெட்­டுப்­போன மீன்­கள் மூலம் தொற்று ஏற்­பட்டு இருக்­கும் என்று கரு­து­வ­தற்கு எந்த சாட்­சி­ய­மும் இல்லை என்று நேற்று நடந்த கொவிட்-19 சிறப்­புப் பணிக்­குழு மெய்­நி­கர் கூட்­டத்­தில் அவர் தெரி­வித்­தார்.

ஜூரோங் மீன்­பி­டித் துறை­முகத்­திற்கு மீன்­க­ளைக் கொண்டு வந்த இந்­தோ­னீ­சி­யாவைச் சேர்ந்த அல்­லது இதர மீன்­பி­டிப் பட­கு­கள் மூலம் அந்­தத் துறை­மு­கத்­தில் கிருமி நுழைந்து இருக்­க­லாம் என நம்­பப்­ப­டு­கிறது.

துறை­மு­கத்­தில் ஸ்டால் கடை­களை நடத்­தும் மக்­க­ளுக்குப் படகு­களில் இருந்து எப்­படி கிருமி தொற்­றி­யது என்­பது இன்­ன­மும் துல்­லி­ய­மா­கத் தெரி­ய­வில்லை என்று அவர் குறிப்­பிட்­டார்.

ஜூரோங் மீன்­பி­டித் துறை­முகத்­தில் சமூக இடைவெளி­யைக் கடைப்­பி­டித்து பல்­வேறு நட­வ­டிக்­கை­களும் இடம்­பெ­று­கின்­றன என்­பதை உறு­திப்­ப­டுத்த பல முயற்சிகளும் எடுக்­கப்­பட்டு வரு­கின்­றன.

இருந்­தா­லும் அங்கு நில­வும் சூழ்­நிலை, செயல்­பா­டு­க­ளின் தன்மை ஆகி­யவை கார­ண­மாக பாது­காப்பு நட­வ­டிக்­கை­களை முற்­றி­லும் நிலை­நாட்­டி­ வ­ரு­வது மிக­வும் சவா­லாக இருக்­கிறது என பேரா­சி­ரி­யர் மாக் தெரி­வித்­தார்.