கொவிட்-19 விதிமீறல்: 66 நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை

கொவிட்-19 விதிமீறல்: 66 நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை

2 mins read
0de66199-4d53-42d8-aecc-55a5b29246d7
-

வேலை இடங்­களில் கொவிட்-19 பாது­காப்பு விதி­களை மீறி­ய­தற்­காக 66 நிறு­வ­னங்­க­ளுக்கு எதிராக அமலாக்க நட­வ­டிக்­கை­கள் எடுக்­கப்­பட்­டுள்­ளன.

வேலை இட பாது­காப்பு நடி­வடிக்­கை­கள் தொடர்­பில் 3,500க்கும் மேற்­பட்ட தக­வல்­கள் தனக்குக் கிடைத்­த­தாக மனிதவள அமைச்சு தெரி­வித்­தது. அவற்­றின் அடிப்­படை­யில் அமைச்சு நட­வ­டிக்கை எடுத்­தது. இரண்­டாம் கட்ட கட்­டுப்­பாடு­கள் மே 16 ஆம் தேதி நடப்­புக்கு வந்­தன.

அதனையொட்டி வீட்­டில் இருந்து வேலை பார்க்­கும் நடை­மு­றையை வழக்­க­மான ஒன்­றாக ஆக்­கும்­படி முத­லா­ளி­கள் கேட்­டுக்­கொள்­ளப் பட்­ட­னர். அது முதல் அமைச்­சுக்கு அத்­த­கைய தக­வல்­களும் புகார்­களும் கிடைத்­தன.

வீட்­டில் இருந்து வேலை பார்க்­கக்­கூடிய ஊழி­யர்­கள் அவ்­வாறே செய்ய வேண்­டும் என்று அறிவுறுத்­தப்­பட்­டது.

ஆனால் பல நிறு­வ­னங்­களும் இப்­படி செய்­யா­ததே பொது­வான விதி­மீ­ற­லாக இருந்­த­தாக அமைச்சு குறிப்­பிட்­டது. முதல்­த­டவை குற்­றம் புரி­வோ­ருக்கு $1,000 அப­ரா­தம் விதிக்க முடி­யும். மீண்­டும் குற்­றம் புரிந்­தால் அப­ரா­தம் $,2000 வரை விதிக்­கப்­படும்.

அலு­வ­ல­கத்­தில் வேலை பார்க்­கும்போது ஊழி­யர்­கள் குறைந்­த­பட்­சம் 1 மீட்­டர் இடை­வெ­ளி­யைக் கடைப்­பி­டிக்க வேண்­டும் என்­பதை அமைச்சு நினை­வூட்­டி­யது.

வேலை இடங்­களில் சமூக ஒன்று­கூ­டல்­க­ளுக்கு அனு­மதி இல்லை. ஊழி­யர்­கள் குறிப்­பிட்ட நேரங்­களில் தனித்­தனியாக உணவு உண்ண வேண்­டும்.

பொது இடங்­களில் கூட்­டத்தைக் குறைக்க, குறிப்­பாக உச்ச நேரங்­களில், பாது­காப்பு இடை­வெளி அடை­யாளங்­கள் தெள்­ளத்தெளி­வாக இடம்பெற்றிருக்க வேண்­டும்.

வீட்­டில் இருந்து வேலை பார்க்கும் ஏற்­பாடே இன்­ன­மும் பொது­வா­ன­தாக நடப்­பில் இருந்து வரு­கிறது என்­பதை முத­லா­ளி­க­ளுக்கு அமைச்சு நினை­வூட்­டி­யது.

சிங்­கப்­பூ­ரில் சமூ­கத்­தொற்று கூடு­கிறது. ஆகை­யால் வேலை இடம் போன்ற பொது இடங்­களில் கூட்­டத்­திற்கு வரம்பு விதிப்­பது முக்­கி­ய­மானதாக, அவ­சி­ய­மா­னதாக இருக்­கிறது என்­பதை அமைச்சு சுட்­டி­யது.

வேலை இடத்­திற்கு வர­வேண்­டிய தேவை இருக்­கி­றதா இல்­லையா என்­பதை ஊழி­யர்­க­ளி­டம் முத­லாளி­கள் தெளி­வாக விளக்­க­ வேண்டும். ஊழி­யர்­கள், தங்­கள் கவலையை, அக்­க­றை­களை முத­லா­ளி­களிடம் தெரி­யப்­ப­டுத்த வேண்­டும்.

தொற்­றுப் பர­வலை முறி­ய­டித்து சிங்­கப்­பூரை பாது­காப்­பாக, நல­மிக்­க­தாக வைத்­தி­ருக்க ஒவ்­வொரு வரின் ஒத்­து­ழைப்­பும் அவ­சி­யம் என்­பதை அமைச்சு வலி­யு­றுத்­தியது.