ரிவர் வேலி உயர்நிலைப் பள்ளி மாணவனின் கொலை தொடர்பாக போலிசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். உயர்நிலை ஒன்றில் பயின்ற சிறுவனைக் கொல்லப் பயன்படுத்தப்பட்ட
கோடரியை அப்பள்ளியில் பயின்ற 16 வயது உயர்நிலை நான்கு மாணவன் இணையம் மூலம் வாங்கியதாக ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக சட்ட, உள்துறை அமைச்சர் கா. சண்முகம் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டார்.
ஆனால் விசாரணை நிறை
வடைந்த பிறகுதான் வழக்கு தொடர்பான முழு விவரங்கள் பற்றி தெரியவரும் என்றார் அவர்.
பொதுவாக சிங்கப்பூர் பள்ளிகளில் மாணவர்கள் பாதுகாப்புடன் இருப்பது உறுதி என்று அனைவரும் கருதுவதால் இந்தக் கொலைச் சம்பவம் அனைவருக்கும் அதிர்ச்சி யை ஏற்படுத்தியிருப்பதாக அவர் கூறினார். எந்தப் பெற்றோருக்கும் இப்படி ஒரு பாதிப்பு ஏற்படக்
கூடாது என்றார் திரு சண்முகம்.
சொல்லொணா துயரத்தில் ஆழந்துள்ள கொலையுண்ட சிறு
வனின் பெற்றோரின் துன்பத்தை அனைவரும் பகிர்ந்துகொள்வதாக அவர் கூறினார்.
"தாக்குதல் நடத்தியவரும் ஒரு சிறுவன். அவர் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
"அந்தச் சிறுவனுக்கு மனநலப் பிரச்சினைகள் இருந்துள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது," என்று அமைச்சர் சண்முகம் தெரிவித்தார். கொலை செய்ததாக நம்பப்படும் சிறுவன் நேற்று காணொளி வாயிலாக நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டான்.
நேற்று முன்தினம் காலை 11.16 மணியிலிருந்து 11.44 மணிக்கு இடைப்பட்ட நேரத்தில் பள்ளியின் நான்காவது மாடியில் உள்ள கழி
வறையில் 13 வயது சிறுவனைக் கொன்றதாக அவன் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மனநலப் பரிசோதனைக்காக குற்றம் சாட்டப்பட்ட மாணவன் சாங்கி மருத்துவ நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளான். குற்றச்சாட்டை எதிர்நோக்கும் மாணவன் முன்பு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாகவும் அதன் காரணமாக 2019ஆம் ஆண்டில் மனநலக் கழகத்தில் அவரது மனநலம் பரிசோதிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

