மாண்ட சிறுவனுக்குப் பள்ளிக்கு வெளியே மலர் அஞ்சலி

மாண்ட சிறுவனுக்குப் பள்ளிக்கு வெளியே மலர் அஞ்சலி

1 mins read
2b1d7e76-d805-440e-b4f0-dee1564775b6
-

கொல்லப்பட்ட ரிவர் வேலி உயர்நிலைப்பள்ளி மாணவனுக்கு அப்பள்ளிக்கு வெளியே நேற்று மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.

பள்ளிக்கு அருகில் வசிக்கும் பெற்றோர், முன்னாள் மாணவர்கள், அவ்வட்டாரக் குடியிருப்பாளர்கள் பள்ளிக் கட்டடத்துக்கு வெளியே மலர்க்கொத்துகளை அடுக்கிவைத்து மாண்ட சிறுவனுக்கு மரியாதை செலுத்தினர். ஏறத்தாழ 60 மலர்க்கொத்துகள் அடுக்கிவைக்கப் பட்டதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழின் செய்தியாளர்கள் தெரிவித்தனர். சம்பவம் தங்களைச் சோகத்தில் ஆழ்த்தியுள்ளதாகப் பலர் கூறினர்.

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்