மசெக சமூக அறநிறுவனம் சிறந்த வேலையிடம்

மசெக சமூக அறநிறுவனம் சிறந்த வேலையிடம்

2 mins read
52371b5f-621f-4deb-9094-d15857a76ae2
-

மக்­கள் செயல் கட்சி (மசெக) சமூக அற­நி­று­வ­னம் ஆசி­யா­வி­லேயே ஆகச் சிறந்த வேலை­யி­ட­மாக 'கிரேட் பிளேஸ் டு ஒர்க்' அமைப்பால் தர­நி­லைப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.

500 அல்­லது அதற்கும் அதி­க­மான ஊழி­யர்­க­ளைக் கொண்ட பெரிய வேலை­யி­டங்­க­ளுக்­கான பிரி­வில் மசெக சமூக அற­நி­று­

வ­னம் முதல் இடம்­பி­டித்­துள்­ளது.

மசெக சமூக அற­நி­று­வ­னம் இந்­தப் பிரி­வின்­கீழ் அடை­யா­ளம் காணப்­பட்­டுள்ள ஒரே ஒரு சிங்­கப்­பூர் அமைப்பு என்று தெரி­விக்­கப்­பட்­டது.

மசெக சமூக அற­நி­று­வ­னத்தை மக்­கள் செயல் கட்சி 1986ஆம் ஆண்­டில் நிறு­வி­யது.

சமூ­கத்­துக்­கான சமூக, கல்வி, நல்­வாழ்­வுத் திட்­டங்­களை அது நடத்­து­கிறது.

கொவிட்-19 சூழ­லின்­போது சிறந்த வேலை­யி­டத் திட்­டங்

­க­ளை­யும் ஊழி­யர் ஆத­ரவு நட­

வ­டிக்­கை­க­ளை­யும் மசெக சமூக அற­நி­று­வ­னம் நடை­மு­றைப்

­ப­டுத்­தி­ய­தாக 'கிரேட் பிளேஸ் டு ஒர்க்' அமைப்­பின் ஆசி­யான் மற்றும் ஆஸ்­தி­ரே­லியா-நியூ­சி­லாந்­துப் பிரி­வின் நிர்­வாக இயக்­கு­நர் திரு­வாட்டி எவ­லின் குவேக் பாராட்­டி­னார்.

"நெருக்­க­டி­நி­லை­யின்­போது ஊழி­யர்­க­ளுக்­குத் தேவை­யான ஆத­ரவை வழங்­கிய அதே வேளை­யில், 8,000 ஊழி­யர்­க­ளை­யும் 360 பாலர்க் கல்வி நிலை­யங்­க­ளை­யும் ஏழு மூத்­தோர் பரா­ம­ரிப்பு நிலை­யங்­க­ளை­யும் வழி­ந­டத்­து­வது எளி­தான காரி­ய­மல்ல," என்று திரு­வாட்டி குவேக் தெரி­வித்­தார்.

உதா­ர­ணத்­துக்கு, 600 அல்ட்­ரா­வை­லட் சுத்­தி­க­ரிப்­பான்­களை மசெக சமூக அறநிறுவ­னம் வாங்­கி­யது.

அது­மட்­டு­மல்­லாது, தனது பாலர்க் கல்வி நிலை­யங்­கள், மூத்­தோர் பரா­ம­ரிப்பு நிலை­யங்­கள், தலை­மை­ய­கம் ஆகிய இடங்களை அடிக்­கடி சுத்­தம் செய்ய நிபு­ணத்­துவ துப்­பு­ர­வுப் பணி ஒப்­பந்­த­

தா­ரர்­க­ளின் சேவையை அது பயன்­ப­டுத்­தி­யது.

ஊழி­யர்­களை உற்­சா­கப்­ப­டுத்த வாரந்­தோ­றும் அவர்­க­ளுக்கு குறிப்­பு­க­ளை­யும் சுய­மாக தயா­ரிக்­கப்­பட்ட காணொ­ளி­க­ளை­யும் பாடல்

­க­ளை­யும் மூத்த மேலா­ளர்­கள் அனுப்பி வைத்­த­னர்.

கொவிட்-19 நெருக்­க­டி­நிலை கார­ண­மாக விதிக்­கப்­பட்ட பய­ணக் கட்­டுப்­பாட்­டின் விளை­வாக விமா­னச் சேவை­கள் ரத்து செய்­யப்­பட்­ட­தால் வெளி­நா­டு­க­ளி­லி­ருந்து சிங்­கப்­பூ­ருக்கு வர முடி­யா­மல் தவித்த ஊழி­யர்­க­ளுக்­காக மசெக சமூக நிறு­வ­னம் அதன் ஊழி­யர்­க­ளுக்­கான மருத்­து­வ­மனை, அறுவை சிகிச்சை காப்­பு­று­தித் திட்­டத்தை மாற்றி அமைத்­தது.

இதன் விளை­வாக மற்ற நாடு­

க­ளி­லும் ஊழி­யர்­கள் மருத்­துவ சிகிச்சை பெற்­றுக்­கொண்­டால் அதற்­கான கட்­ட­ணத்­தைச் செலுத்த காப்­பு­று­தித் திட்­டத்­தைப் பயன்­ப­டுத்­த­லாம்.

இல்­லத் தனிமை உத்­த­ரவு அல்­லது தனி­மைப்­ப­டுத்­து­தல் உத்­த­ரவை நிறை­வேற்­றும் தனது ஊழி­யர்­க­ளுக்கு அன்­றாட

உண­வுக்­கான படித்­தொ­கையை வழங்­கி­ய­தாக அற­நி­று­வ­னம் கூறி­யது. மசெக சமூக அற­நி­று­வ­னத்­தைத் தவிர்த்து, சிங்­கப்­பூ­ரில் இயங்­கும் வேறு சில அமைப்­பு­

க­ளின் வேலை­யிட அணு­கு­மு­றை­களும் அடை­யா­ளம் காணப்­பட்டு கௌர­விக்­கப்­பட்­டன.

பன்­னாட்­டுப் பட்­டி­ய­லில் டிஎச்­எல் நிறு­வ­னம் முதல் இடத்­தை­யும் சிஸ்கோ நிறுவ­னம் மூன்­றா­வது இடத்­தை­யும் பிடித்­தன.