தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ரிவர் வேலி உயர்நிலைப் பள்ளியில் இறுக்கமான சூழல்

1 mins read
0f755e46-a55a-4b71-9cb9-e0c3177acb60
ஒரு டஜனுக்கும் அதிக ஊழியர்களும் பாதுகாப்பு அதிகாரிகளும் வாயில் கதவு அருகே அதிகாலை 6.30 மணி முதல் இருந்தனர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

ரிவர் வேலி உயர்நிலைப் பள்ளிக்கு இன்று (ஜூலை 21) மாணவர்கள் சென்றபோது அங்கு நிலைமை கொஞ்சம் இறுக்கமாகக் காணப்பட்டது.

ஒரு டஜனுக்கும் அதிக ஊழியர்களும் பாதுகாப்பு அதிகாரிகளும் வாயில் கதவு அருகே அதிகாலை 6.30 மணி முதல் இருந்தனர். குறைந்தபட்ச வாழ்த்துகளே பரிமாறிக் கொள்ளப்பட்டன.

பூன் லேயில் அமைந்திருக்கும் அந்தப் பள்ளியில் 13 வயது மாணவன் ஒருவன் கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஹஜ்ஜுப் பெருநாளை முன்னிட்டு அப்பள்ளி நேற்று மூடப்பட்டு இருந்தது.

இன்று பல மாணவர்களும் பூங்கொத்துகளுடன் வந்து மாண்டுவிட்ட தங்கள் சக மாணவருக்கு அஞ்சலி செலுத்தினர்.