வர்த்தக சங்கங்கள் கோரிக்கை

சமூக அள­வில் தொற்­றுச் சம்­ப­வங்­கள் அதி­க­ரித்­தி­ருப்­ப­தைத் தொடர்ந்து கட்­டுப்­பா­டு­கள் கடு­மை­யா­க்கப்­ப­டு­வ­தால் பாதிக்­கப்­ப­டும்

நிறுவனங்களுக்கு ஆத­ர­வாக வர்த்­த­கச் சங்­கங்கள் கோரிக்கை கள் விடுத்துள்ளன. கூடுதல் வாட­கைக்கழிவு, சம்பள ஆத­ரவு, கடன் செலுத்த கூடு­தல் அவ­கா­சம் போன்­ற­வற்­றுக்­கான தேவையை அவை சுட்டிக்காட்டுகின்றன.

முன்­னணி தொழில் வர்த்­த­கச் சங்­கங்­க­ளின் கூட்­ட­மைப்பு நேற்று விடுத்­துள்ள அறிக்­கை­யில் இந்த மூன்று அம்ச உத­வி­ கோரிக்கை காணப்பட்டது.

சில்­லறை வர்த்­த­கம், உணவு பானம் மற்­றும் சேவை­கள் ஆகிய துறை­க­ளின் நீடித்த நிலைத்­தன்­மையை உறுதி செய்ய இது­போன்ற உத­வி­கள் தேவை என கூட்­ட­மைப்பு தெரி­வித்­துள்­ளது.

கடு­மை­யான கட்­டுப்­பா­டு­கள் அறி­மு­கம் காணும்­போது வர்த்­த­கத்­திற்கு ஏற்­படும் பாதிப்­பு­களுக்கு ஏற்ப வாட­கைக் கழி­வு­களை கட்­டட உரி­மை­யா­ளர்­கள் வழங்க வேண்­டும் என அது கோரிக்கை எழுப்பி உள்­ளது.

அத்­து­டன், பல்­வேறு வேலை­கள் சிங்­கப்­பூ­ரர்­க­ளுக்­குச் சாத்­தி­ய­மா­கக்­கூ­டிய வகை­யில் வர்த்­த­கங்­க­ளுக்கு உதவ அர­சாங்­கம் சம்­பள ஆத­ரவை வழங்­கு­வது தொடர்­பான கோரிக்­கை­யை­யும் அது விடுத்­துள்­ளது.

மூன்­றா­வ­தாக, வங்­கி­கள் வழங்கி உள்ள கடன்­க­ளின் அச­லைத் திருப்­பிச் செலுத்­து­வ­தற்­கான காலக்­கெடு 2022 ஜூன் வரை நீட்­டிக்­கப்­பட வேண்­டும் என்ற கோரிக்­கை­யை­யும் கூட்­ட­மைப்பு முன்­வைத்­துள்­ளது.

இரண்­டாம் கட்ட உயர் விழிப்­பு­ நி­லைக் கட்­டுப்­பா­டு­கள் ஆகஸ்ட் 18 வரை நடப்­பில் இருக்­கும் என்ற அறி­விப்பு வெளி­யான நிலை­யில் கூட்­ட­மைப்­பின் அறிக்கை வெளி­வந்து உள்­ளது.

இந்­தக் கட்­டுப்­பா­டு­க­ளின்­படி உணவு பானக் கடை­களில் உட்­கார்ந்து சாப்­பி­டு­வது இன்று முதல் ஆகஸ்ட் 18 வரை தடை செய்­யப்­

ப­டு­கிறது.

சிறிய, நடுத்­தர நிறுவ­னச் சங்­கம், சிங்­கப்­பூர் உண­வ­கச் சங்­கம், சிங்­கப்­பூர் சில்­லறை வர்த்­த­கர்­கள் சங்­கம், சிங்­கப்­பூர், நியா­யத்­தன்­மைக்­கான சிங்­கப்­பூர் வாட­கை­

தா­ரர்­கள் ஐக்­கிய சங்­கம் போன்­றவை இந்­தக் கூட்­ட­மைப்­பில் இடம்­பெற்று உள்­ளன.

வாட­கை­தா­ரர்­கள் ஐக்­கிய சங்­கத்­தின் தலை­வ­ரான டெரன்ஸ் யாவ் நேற்று மெய்­நி­கர் வாயி­லா­கச் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசி­னார்.

கட்­டட உரி­மை­யா­ளர்­கள் இங்­கொன்­றும் அங்­கொன்­று­மாக சில குறிப்­பிட்ட உத­வியை மட்­டும் செய்­வ­தாக அவர் தெரி­வித்­தார். அதே நேரம், கடந்த முறை உதவி வழங்­கு­வதை அர­சாங்­கம் கட்­டா­ய­மாக்­கி­ய­போது அவர்­க­ளி­ட­மி­ருந்து கணி­ச­மான உதவி கிட்­டி­ய­தா­க­வும் அவர் சொன்­னார்.

"வாடகை இடத்­தில் தொழில் நடத்­தும் முன்­னணி வர்த்­த­கங்­க­ளில் பெரும்­பான்­மை­யி­னர் அவர்­க­ளின் கட்­டட உரி­மை­யா­ளர்­க­ளி­டம் இருந்து இன்­னும் போது­மான வாடகைக் கழிவு ஆத­ர­வைப் பெற­வில்லை. பெரி­ய­தொரு வாடகை உதவி அர­சாங்­கத்­தி­ட­மி­ருந்து கிடைக்­கிறது. அது அடுத்த மாதம் கிடைக்க உள்­ளது," என்­றார் திரு டெரன்ஸ்.

பாதிக்கப்படும் நிறுவனங்களுக்கு கூடுதல் வாடகைக்கழிவு, சம்பள ஆதரவு, கடன் செலுத்த அவகாசம்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!