4 சந்தைகளுக்குச் சென்றோர் நீண்ட வரிசையில் காத்திருந்து பரிசோதனை சாதனம் பெற்றனர்

4 சந்தைகளுக்குச் சென்றோர் நீண்ட வரிசையில் காத்திருந்து பரிசோதனை சாதனம் பெற்றனர்

2 mins read
aec68f8e-9efd-439d-806a-f3b9f034c922
ஹேக் ரோடு புளோக் 5ல் வழங்கப்பட்ட சாதனத்தை நேற்று பெற்றுக்கொண்ட குடியிருப்பாளர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சிங்­கப்­பூ­ரில் நான்கு சந்­தை­க­ளுக்­கும் உணவு நிலை­யங்­க­ளுக்­கும் சென்­றோ­ருக்கு வழங்­கப்­படும் கொவிட்-19 சுய பரிசோதனை சாத­னத்­தைப் பெற நேற்றும் நீண்ட வரி­சை­கள் காணப்­பட்­டன.

அச்­சா­த­னத்­தைப் பெற நேற்று கடைசி நாள் என்­ப­தால் அதற்கு பெரும்பாலானோர் ஆர்வம் காட்டி னர்.

கடந்த 14 நாட்­களில் செங் சான், சோங் பூன், கேலாங் சிராய், ஹேக் ரோடு ஆகிய சந்தை மற்­றும் உணவு நிலை­யங்­க­ளுக்­குச் சென்­றோ­ருக்கு இந்த கொவிட்-19 கிருமி சுய பரி ­சோ­த­னைச் சாத­னம் வழங்­கப்­ப­டு­கிறது. இந்த இடங்­க­ளுக்கு அருகே வசிக்­கும் குடி­யி­ருப்­பா­ளர்­களும் இச்­சா­த­னைத்­தைப் பெறு­வோர் எண்­ணிக்­கை­யில் அடங்­குவர்.

இச்­சா­த­னம் வழங்­கும் பணி தீவு முழு­வ­தும் 22 சமூக நிலை­யங்­க­ளி­லும் வசிப்­போர் குழு நிலை­யங்­க­ளி­லும் நேற்று முன்­தி­னம் தொடங்­கி­யது. இந்த இரு நாள் விநி­யோ­கப் பணி நேற்று மாலை 6 மணி அள­வில் நிறை­வு­பெ­றும் என்று அறி­விக்­கப்­பட்டு இருந்­தது.

கேலாங் சிராய் வசிப்­போர் குழு நிலை­யத்­தில் இச்­சா­த­னத்­தைப் பெற நேற்­றுக் காலை 10 மணி­ய­ள­வில் 20 பேர் வரி­சை­யில் நின்­றி­ருந்­ததை 'ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ்' செய்­தி­யா­ளர் கண்­டார்.

சாத­னத்தை வழங்­கும் பணி ஒவ்­வொ­ரு­வ­ருக்­கும் ஐந்து நிமி­டங்­களில் மிக விரை­வாக நடை­பெற்­றது.

அதனை இல­வ­ச­மா­கப் பெற்­ற­வர்­களில் ஒரு­வ­ரான திரு ராஜு, 76, என்­ப­வர் இரு நாட்­க­ளுக்கு முன்­னர் ஹேக் ரோடு சந்தை மற்­றும் உணவு நிலை­யத்­திற்­குச் சென்­றி­ருந்­த­தாக 'ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ்' செய்­தி­யா­ள­ரி­டம் கூறி­னார். தாம் நல்ல உடல்­நி­லையை உணர்­வ­தா­கக் கூறிய அவர், இரு தடுப்­பூ­சி­

க­ளை­யும் போட்­டுக்­கொண்­ட­வர்.

உள்­ளூ­ரில் கிருமி பர­வு­வது அண்­மை­யில் அதி­க­ரித்­தது. புதி­தாக கொவிட்-19 கிரு­மித்­தொற்­றுக்கு ஆளா­னோ­ரில் பல­ரும் சில சந்­தை­கள் மற்­றும் உணவு நிலை­யங்­க­ளுக்­குச் சென்று வந்­த­வர்­கள் என்று கண்­ட­றி­யப்­பட்­டது. அத­னைத் தொடர்ந்து கிரு­மிப் பர­வ­லைத் தடுக்­கும் முயற்­சி­யாக இவ்­வி­டங்­க­ளுக்­குச் சென்­றோ­ருக்கு இல­வச சுய பரி­சோ­த­னைச் சாத­னம் வழங்­கப்­பட்­டது.