ஆதரவு மானியம் பெற்ற இரவுக்கூடம் எதுவும் தொற்றுக் குழுமத்தில் இல்லை

ஆதரவு மானியம் பெற்ற இரவுக்கூடம் எதுவும் தொற்றுக் குழுமத்தில் இல்லை

2 mins read
a5a8c902-212e-4e8f-9c5c-e11b008757c9
-

400ல் 18க்கு மட்டுமே ஆதரவு வழங்கப்பட்டதாக அரசாங்க அமைப்புகள் தகவல்

உணவு, பானக் கடை­க­ளாக மாற 18 முன்­னாள் இரவு கேளிக்­கைக்­கூ­டங்­க­ளுக்கு மட்­டுமே என்­டர்­பி­ரைஸ் சிங்­கப்­பூர் ஆத­ரவு தொகுப்­புத் திட்­டங்­கள் வழங்­கப்­பட்­டுள்­ளன. அந்த 18 கேளிக்­கைக்­கூ­டங்­களில் 10 மது­பா­னக்­கூ­டங்­கள், ஆறு இரவு நேர மன­ம­கிழ் மன்­றங்­கள், இரண்டு கர­வோவ்கே நிலை­யங்­கள் ஆகி­யவை அடங்­கும்.

அவற்­றில் எது­வும் கேடிவி கொவிட்-19 குழு­மத்­தில் இடம்பெற வில்லை என அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த ஆத­ரவு மானி­யத்­திற்கு 400க்கு மேற்பட்ட இரவு நேர கேளிக்­கைக்­கூ­டங்­கள் அங்கீகரிக்கப்பட்ட மற்ற தொழில் களுக்கு மாறிவிட்டன.

ஆயினும் உதவிமானியம் பெற்ற கூடங்கள் 18 மட்டுமே என தெரி விக்கப்பட்டுள்ளது.

உணவு, பான நிலை­யங்­க­ளாக செயல்­பட்டு வந்த சட்­ட­வி­ரோத கேடிவி கூடங்களில் அண்­மை­யில் பாது­காப்பு நிர்­வாக நடை­மு­றை­கள் மீறப்­பட்­ட­தன் கார­ண­மாக ெதாற்று பர­வி­யது.

இதன் தொடர்­பில் வெளி­யா­கி­யுள்ள கருத்­து­க­ளை­யும் தவ­றான கண்­ணோட்­டங்­க­ளை­யும் தெளி­வு­

ப­டுத்­தும் வித­மாக என்­டர்­பி­ரைஸ் சிங்­கப்­பூர் அமைப்­பும் வர்த்­தக, தொழில் அமைச்­சும் நேற்று கூட்­ட­றிக்கை ஒன்றை வெளி­யிட்­டன.

கொவிட்-19 கொள்­ளை­நோய் சூழல் கார­ண­மாக கடந்த ஆண்டு மார்ச் 27ஆம் தேதி­யி­லி­ருந்து இரவு நேர கேளிக்­கைக்­கூ­டங்­கள் செயல்­ ப­டத் தடை விதிக்­கப்­பட்­டுள்­ளது.

அதைத் தொடர்ந்து உணவு, பான நிலை­யங்­கள், அலு­வ­லக இடங்­கள், உட­லு­றுதி நிலை­யங்­கள் உள்­ளிட்ட அனு­ம­திக்­கக்­கூ­டிய நட­வ­டிக்­கை­க­ளுக்கு தங்­க­ளது செயல்­பா­டு­களை மாற்­றிக்­கொள்ள பல வர்த்­த­கங்­களும் சிங்­கப்­பூர் இரவு நேர கேளிக்­கைக்­கூட வர்த்­த­கச் சங்­க­மும் அர­சாங்­கத்­தி­டம் மேல்­மு­றை­யீடு செய்­தி­ருந்­த­தாக கூட்­ட­றிக்கை தெரி­விக்­கிறது.

இரவு நேர கேளிக்­கைக்­கூட தொழில்­துறை எதிர்­நோக்­கிய சவால்­க­ளைக் கருத்­தில் கொண்டு தேர்ந்­தெ­டுக்­கப்­பட்ட நிலை­யங்­கள் கடந்த ஆண்டு அக்­டோ­ப­ரி­லி­ருந்து தங்­க­ளது செயல்­பா­டு­களை மற்ற வர்த்தக நட­வ­டிக்­கை­க­ளுக்கு மாற்­றிக்­கொள்ள அர­சாங்­கம் அனு­மதி வழங்­கி­ய­தாக என்­டர்­பி­ரைஸ் சிங்­கப்­பூர் அமைப்­பும் வர்த்­தக, தொழில் அமைச்­சும் தெரி­வித்­தன.

அவ்­வாறு செய்ய, அதி­கா­ரி­க­ளி­ட­மி­ருந்து ஒப்­பு­தல் பெற்று இரவு நேர கேளிக்­கைக்­கூ­டங்­கள் வர்த்­த­கத் திட்­டம் ஒன்­றைச் சமர்ப்­பிக்க வேண்­டும்.

இந்­நி­லை­யில், ஆத­ர­வுத் திட்­டத்­திற்கு வெற்­றி­க­ர­மாக விண்­ணப்­பித்­துள்ள நிலை­யங்­கள், என்­டர்­பி­ரைஸ் சிங்­கப்­பூர் அமைப்­பி­ட­மி­ருந்து $50,000 வரை மானி­யம் பெற தகுதி பெறு­கின்­றன.

கொவிட்-19 விதி­மு­றை­க­ளுக்கு உட்­பட்டு நடப்­பதை உறுதி செய்ய, காவல்துறையுடன் இணைந்து என்­டர்­பி­ரைஸ் சிங்­கப்­பூர், நகர மறு­சீ­ர­மைப்பு ஆணை­யம், சிங்­கப்­பூர் பய­ணத்­து­றைக் கழ­கம் ஆகி­யவை இத்தகைய நிலை­யங்­க­ளில் சோதனை நடத்தி வருகின்றன.

தவறிழைப்போர் மீது அரசாங்க அமைப்புகள் நடவடிக்கை எடுக்கத் தயங்காது என்று கூட்டறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.