பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு நிபுணர்கள் உளவியல் உதவி

பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு நிபுணர்கள் உளவியல் உதவி

1 mins read
ed476455-25a8-4cbb-8164-ca5d66ca0fb4
-

ரிவர் வேலி உயர்­நி­லைப் பள்ளி மாண­வர்­க­ளுக்கு உள­வி­யல் ரீதி­யி­லான ஆத­ரவு வழங்­கப்­பட்டு வரு­வ­தாக கல்­வித் துறை தலைமை இயக்­கு­நர் வோங் சியூ ஹூங் தெரி­வித்­துள்­ளார்.

உயர்­நிலை 1 மாண­வர் மற்­றும் அவ­ரைக் கொலை செய்­த­தா­கக் குற்­றம் சுமத்­தப்­பட்­டுள்ள 16 வயது மாண­வர் ஆகிய இரு­வ­ரின் நெருங்­கிய பள்­ளித் தோழர்­க­ளுக்­கும் ஆசி­ரி­யர்­க­ளுக்­கும் மன­வே­த­னையை அகற்றி உள­வி­யல் சார்ந்த முத­லு­தவி வழங்க கல்வி அமைச்­சின் நிபு­ணர்­களும் பயிற்சி பெற்ற பள்ளி ஆலோ­ச­கர்­களும் அப்­பள்­ளிக்­கூ­டத்­திற்­குச் சென் றுள்­ள­தாக அவர் கூறி­யுள்­ளார்.

இதற்­காக ரிவர் வேலி உயர்­நி­லைப் பள்­ளி­யில் அறை ஒன்று தயார்ப்­ப­டுத்­தப்­பட்டு உள்­ளது.

பாதிக்­கப்­பட்ட பள்ளி மாண­வர்­கள், அலு­வ­லர்­கள் மற்­றும் பெற்­றோர்­ இந்த அறைக்­குச் சென்று நிபு­ணர்­க­ளி­ட­மும் ஆலோ சகர்­க­ளி­ட­மும் உள­வி­யல் ஆத­ரவு பெற­லாம் என அறி­விக்­கப்­பட்டு உள்­ளது.

செவ்­வாய்க்­கி­ழமை தொடங்­கிய இந்த ஆத­ரவு நடவடிக்கை நேற்­றும் தொடர்ந்­தது. வார இறுதி வரை அவர்­கள் அந்­தப் பள்­ளி­யில் இருப்­பார்­கள்.

மரண சம்­ப­வத்­திற்­குப் பிறகு சில பெற்­றோர்­ தங்­க­ளின் பிள்­ளை­க­ளுக்­கான பாது­காப்பு பற்றி கவ­லைப்­ப­டு­வ­தைப் புரிந்துகொள்ள முடி­வ­தாக திரு வோங் கூறி­னார்.