35 பேரிடம் கிருமித்தொற்று; அடுத்தடுத்து சந்தைகள் மூடல்

35 பேரிடம் கிருமித்தொற்று; அடுத்தடுத்து சந்தைகள் மூடல்

1 mins read
c8170b29-8e8b-425e-b6dd-07e2192cbb24
ஹேக் ரோடு சந்தை நேற்று மூடப்பட்டது. கிருமிப் பரவல் அபாயத்தைத் தணிக்க ஆகஸ்ட் 4 வரை இச்சந்தை மூடப்பட்டிருக்கும். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

கிரு­மிப் பர­வல் கார­ண­மாக ஹேக் ரோடு, சொங் பாங் சந்தை மற்­றும் உணவு நிலை­யங்­கள் நேற்று மூடப்­பட்­டன. இவ்­வி­ரண்டு இடங்­க­ளி­லும் 35 பேருக்­குக் கிருமி தொற்­றி­ய­தைத் தொடர்ந்து ஆகஸ்ட் 4ஆம் தேதி வரை மூடி வைக்க உத்­த­ர­வி­டப்­பட்டு உள்­ளது. கிரு­மிப் பர­வலை முறி­ய­டிக்­க­வும் கிருமி நீக்க சுத்­தி­க­ரிப்­புப் பணி­களை மேற்­கொள்­ள­வும் இவை மூடப்­ப­டு­வ­தாக சுகா­தார அமைச்சு செவ்­வாய்க்­

கி­ழமை இரவு தெரி­வித்­தது. கிருமி தொற்­றி­ய­தாக உறுதி செய்­யப்­பட்­ட­வர்­களில் இந்­தச் சந்­தை­க­ளுக்­குச் சென்­றோ­ரும் இவற்­றில் பணி­யாற்­று­ வோ­ரும் அடங்­கு­வர்.

ஹேக் ரோடு சந்தை மற்­றும் உணவு நிலை­யத்­தில் 25 பேரும் சொங் பாங் சந்தை மற்­றும் உணவு நிலை­யத்­தில் 10 பேரும் பாதிக்­கப்­பட்­டி­ருப்­ப­தாக அமைச்சு கூறி­யது.

இதே­போல, சோங் பூன் சந்தை மற்­றும் உணவு நிலை­யம் ஜூலை 18ஆம் தேதி மூடப்­பட்­டது. ஆகஸ்ட் 1 வரை அது மூடப்­பட்­டி­ருக்­கும். இந்த இடத்­திற்கு ஜூலை 3 முதல் ஜூலை 17 வரை சென்­ற­வர்­க­ளுக்கு இல­வச பரி­சோ­த­னைச் சாத­னம் வழங்­கப்­பட்­டது. சமூக அள­வில் கிரு­மிப் பர­வ­லைக் கண்­ட­றிய இவ்­வாறு செய்­யப்­பட்­டது.

பாதிக்­கப்­பட்ட சந்­தை­க­ளுக்­குச் சென்­றோர் தங்­க­ளது உடல்

­நி­லையை 14 நாள்­க­ளுக்­குக் கவ­னித்­துக்­கொள்­ளு­மாறு அமைச்சு வலி­யு­றுத்தியுள்­ளது. கிருமிப் பர­வல் அபா­யத்­தில் சிக்­கி­வி­டா­மல் இருக்க சந்­தை­க­ளுக்­குச் செல்­வோர் கூட்­டங்­க­ளைத் தவிர்க்­கு­மா­றும் உச்­ச­நே­ர­மற்ற நேரங்­களில் செல்­லு­மா­றும் அது ஆலோ­சனை கூறி­யுள்­ளது.