செய்திக்கொத்து

செய்திக்கொத்து

3 mins read
2dd6f8b8-0501-41b8-8b40-2221189c52ee
-

பள்ளிக்கூட சம்பவம் கற்பனைக்கு எட்டாத துயரம்: அதிபர் ஹலிமா

ரிவர் வேலி உயர்­நி­லைப் பள்­ளி­யில் நிகழ்ந்த சம்­ப­வம் நினைத்­துப் பார்க்­கவே கடி­ன­மா­னது என்­றும் கற்­ப­னைக்கு எட்­டாத துய­ரம் என்­றும் அதி­பர் ஹலிமா யாக்­கோப் தெரி­வித்­துள்­ளார். உயி­ரி­ழந்த சிறு­வ­னின் குடும்­பத்­தா­ருக்கு இரங்கல் தெரிவிக்கும் வாச­கங்­களை அவர் நேற்று தமது ஃபேஸ்புக்­கில் பதி­விட்­டார்.

"இவ்­வா­ரத்­ தொடக்­கத்­தில் ரிவர் வேலி பள்­ளிக்­கூ­டத்­தில் நிகழ்ந்­ததை அறிந்­த­தும் ஆழ்ந்த துய­ருற்­றேன். இளை­யர்­கள், மாண­வர்­கள் உள்­ளிட்ட பல­ரும்­கூட அதிர்ச்சி அடைந்­தி­ருப்­பார்­கள். இச்­செய்தி சில­ருக்கு அச்­சத்­தை­யும் ஏற்­ப­டுத்தி இருக்­கக்­கூ­டும்.

"அதே­நே­ரம் சிலர் ஆத­ர­வற்­ற­தைப்போல உணர்ந்­தும் குழப்­பம் அடைந்­தும் இருக்­கக்­கூ­டும். அத்­த­கை­யோ­ரில் ஒரு­வ­ராக நீங்­கள் இருந்­தால், நீங்­கள் தனிப்­பட்ட ஒரு­வர் இல்லை என்­பதை உங்­க­ளுக்கு நான் சொல்­லிக்­கொள்ள விரும்­பு­கி­றேன். உதவி நாடு­வது என்­பது பல­வீ­னத்­தின் அடை­யா­ளம் இல்லை. ஆத­ரவு வழங்­கக்­கூ­டிய பல குழுக்­களும் அமைப்­பு­களும் இங்கு உள்­ளன.

"எனவே உங்­க­ளின் சிர­மங்­களை எதிர்த்து நீங்­கள் தனி­யா­கப் போராட வேண்­டி­ய­தில்லை என்­பதை நினை­வில் கொள்வது முக்­கி­யம்," என்று அதி­பர் தமது ஃபேஸ்புக் பதி­வில் குறிப்­பிட்­டுள்­ளார்.

கிருமிப் பரவலால் இஸ்தானா பொதுமக்கள் திறப்பு தள்ளிவைப்பு

அதி­க­ரித்து வரும் கிரு­மித்­தொற்று நில­வ­ரத்­தைக் கருத்­தில் கொண்டு பொது­மக்­க­ளுக்கு இஸ்­தானா திறந்­து­வி­டப்­ப­டு­வது தள்­ளி­வைக்­கப்­பட்டு உள்­ளது. தேசிய தினத்தைக் கொண்­டா­டும் நோக்­கில் ஆகஸ்ட் 1ஆம் தேதி பொது­மக்­கள் வரு­கைக்­காக இஸ்­தானா திறந்­து­வி­டப்­படும் என்று அறி­விக்­கப்­பட்டு இருந்­தது. ஏற்­கெ­னவே மே 13ஆம் தேதி இஸ்­தா­னா­வுக்­குச் செல்ல அனு­மதி பெற்­றிருந்தவர்கள் ஆகஸ்ட் 1ஆம் தேதி வருகைதர அழைக்­கப்­பட்டு இருந்­த­னர்.

மே தினம் மற்­றும் நோன்­புப் பெரு­நாள் வேளை­களில் மே மாதம் இஸ்­தா­னாவை திறந்­து­விடத் திட்­ட­மி­டப்­பட்டு அதற்­கான நுழை­வுச்­சீட்­டு­கள் வழங்­கப்­பட்டு இருந்­தன.

கிரு­மிப் பர­வல் தலை­தூக்­கி­ய­தைத் தொடர்ந்து அப்­போ­தும் இஸ்­தானா பொது­மக்­கள் வருகை தள்­ளிப் போடப்­பட்­டது. இந்­நி­லை­யில், ஆகஸ்ட் 1ஆம் ேததி­யும் இஸ்­தானா திறக்­கப்­பட மாட்­டாது என்ற அறி­விப்­பால் பொது­மக்­க­ளுக்கு ஏற்­பட்­டி­ருக்­கும் சிர­மத்­திற்கு மன்­னிப்பு கேட்­டுக்­கொள்­வ­தாக அதி­பர் அலு­வ­ல­கம் நேற்று ஓர் அறிக்­கை­யில் தெரி­வித்­தது.

கொள்­ளை­நோய் பர­வல் தொடங்­கிய சம­யத்­தில் கடந்த ஆண்டு பிப்­ர­வரி முதல் இஸ்­தானா பொது­மக்­க­ளுக்­குத் திறந்து­ வி­டப்­ப­ட­வில்லை. ஆகக் கடை­சி­யாக கடந்த ஆண்டு சீனப் புத்­தாண்டு இரண்­டாம் நாளான ஜன­வரி 26ஆம் தேதி இஸ்­தானா திறந்­து­வி­டப்­பட்டபோது 12,000க்கும் மேற்­பட்ட சிங்­கப்­பூர் குடி­யி­ருப்­பா­ளர்­கள் அங்கு சென்று உப­ச­ரிப்பை அனு

­ப­வித்­த­னர்.

12 தொடக்கப் பள்ளிகளில் குலுக்கல் முறை பதிவு

இவ்­வாண்­டின் மூன்­றாம் கட்ட தொடக்­க­நிலை 1 மாண­வர் பதி­வுக்­கான குலுக்­கல் 12 தொடக்­கப் பள்­ளி­களில் இடம்­பெற உள்­ளது. கோங்­ஷாங் தொடக்­கப் பள்ளி, ஹோலி

இன்­னசன்ட்ஸ் தொடக்­கப் பள்ளி, நான் ஹுவா தொடக்­கப் பள்ளி, ரூலாங் தொடக்­கப் பள்ளி போன்­றவை அந்­தப்

பட்­டி­ய­லில் உள்ளதாக கல்வி அமைச்சு அதன் இணை­யப் பக்­கத்­தில் தெரி­வித்­துள்­ளது. ஆக அதிக விண்­ணப்­பங்­களை நான் ஹுவா தொடக்­கப் பள்ளி பெற்­றுள்­ளது. அங்கு காலி­யாக உள்ள ஐந்து இடங்­க­ளுக்கு 21 பிள்­ளை­கள் விண்­ணப்­பம் செய்­துள்­ள­னர். குலுக்­கல் முடி­வு­கள் நாளை

வெள்­ளிக்­கி­ழமை குறுந்­த­க­வல் மூலம் பெற்­றோர்­க­ளுக்கு அனுப்பி வைக்­கப்­படும். கடந்த ஆண்டு மூன்­றாம் கட்­டப் பதி­வின்­போது அதிக விண்­ணப்­பம் கார­ண­மாக 14 பள்­ளிக்­கூ­டங்­களில் குலுக்­கல் முறை பதிவு நடத்­தப்­பட்­டது.