சீனாவிடமிருந்து கடும் போட்டி

சிங்கப்பூரின் S$41 பில்லியன் எரிபொருள் விற்பனைக்குச் சவால்

ஆசி­யா­வில் கடற்­துறை எரி­பொ­ருள் விற்பனையில் தனி ஆதிக்கம் செலுத்தி வரும் சிங்கப்பூருக்கு போட்டி அதிகரித்துள்ளது.

சீனா, அந்தத் தனிப்பட்ட சந்தை யில் ஒரு பகுதியைக் கைப்பற்ற கடும் முயற்சிகளை எடுத்து வரு கிறது.

அண்­மைய கால­மாக சீனா தனது துறை­மு­கங்­களை விரி­வு­ ப­டுத்தி வச­தி­களை செம்­மை­யாக்கி, அவ்­வ­ழி­யா­கச் செல்­லும் கப்­பல்­களை ஈர்த்து வரு­கிறது.

கடந்த ஐந்து ஆண்­டு­களில் மட்­டும் சீனா­வின் எரி­பொ­ருள் விற்­பனை இரண்டு மடங்­குக்கு மேல் அதி­க­ரித்­துள்­ளது.

உல­கின் முக்­கிய பொரு­ளி­யல் நாடு­க­ளான தென்­கொ­ரியா, ஜப்­பான் போன்­ற­வற்­றின் துறை­மு­கங் ­க­ளுக்­குச் செல்­லும் கப்­பல்­களை ஈர்ப்­ப­தில் அது முக்­கிய கவ­னம் செலுத்தி வரு­கிறது.

இருந்­தா­லும் ஆசி­யா­வில் கப்­பல் எரி­பொ­ருள் விற்­ப­னை­யில் சிங்­கப்­பூர் இன்­ன­மும் முன்­னணி வகித்து வரு­கிறது. சிங்­கப்­பூ­ரின் எரி­பொ­ருள் விநி­யோ­கத்தின் மொத்த மதிப்பு சுமார் 30 பில்­லி­யன்(41 பில்­லி­யன் சிங்­கப்­பூர் வெள்ளி) யுஎஸ் டால­ரா­கும்.

இதனை நன்கு அறிந்­துள்ள சீனா, எரி­பொ­ருள் விநி­யோ­க மைய­மாக ஷோவ்­ஷான் தீவை மேம்படுத்தி வருகிறது.

ஷாங்­கா­யின் கிழக்கு கடற் ­க­ரை­யோ­ர­மாக அமைந்­துள்ள இந்­தத் தீவுக்கு அருகே நாட்டின் புதிய, பெரிய அள­வி­லான கச்சா எண்­ணெய் சுத்­தி­க­ரிப்பு நிலை­யங்­கள் கட்­டப்­பட்டு வரு­கின்­றன.

சீன அர­சாங்­கம், வரிச்­ச­லு­கை­களை அறி­வித்­துள்­ள­தால் அந்­நாட்­டின் எரிெபா­ருள் விலையும் சிங்­கப்­பூ­ருக்­குப் போட்­டி­யாக உள்­ளது.

சிங்­கப்­பூர் தனது நிலையை இன்று வரை கட்­டிக்­காத்து வந்­துள்­ள­தா­கக் கூறிய டிருவ்ரி கடற்­துறை ஆலோ­ச­க­ரான ஜெயந்து கிருஷ்ணா, மற்ற துறை­மு­கங்­க­ளி­ட­ மி­ருந்து எதிர்­கொள்­ளும் போட்­டி­ களை சுட்­டிக்­காட்­டி­னார்.

இதில் ஷோவ்­ஷான் விரை­வில் கப்­பல் எரி­பொ­ருள் விற்­ப­னை­யில் ஒரு பங்­கைக் கைப்­பற்­றும் என்று அவர் சொன்­னார்.

உல­கிலேயே கப்­பல்­க­ளுக்கு எரி­பொ­ருள் நிரப்­பும் ஆகப்­பெ­ரிய மைய­மாகத் திக­ழும் சிங்­கப்­பூர், கடந்த ஆண்­டு ஐம்­பது மில்­லி­யன் டன் எரி­பொ­ருளை விற்­பனை செய்­துள்­ளது. இது, உல­கின் மொத்த விற்­ப­னை­யில் ஐந்­தில் ஒரு பங்கு.

இந்த நிலையில் சீனாவின் கப்பல் எரிபொருள் விற்பனை தொடர்ந்து ஐந்தாவது ஆண்டாக 16.9 மில்லியன் டன்னுக்கு அதி கரித்துள்ளது என்று ஆயில்கெம் என்ற நிறுவனம் மதிப்பிட்டுள்ளது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!