பாத்தாமில் உலகின் ஆகப்ெபரிய மிதக்கும் சூரியத்தகடு மேடை; சன்சீப் உருவாக்குகிறது

இந்­தோ­னீ­சி­யா­வின் பாத்­தாம் தீவில் உல­கி­லேயே ஆகப்­பெ­ரிய மிதக்­கும் சூரி­யத்தகடு மேடை அமைக்­கப்­ப­ட­வி­ருக்­கிறது. இதற்­கான ஒப்­பந்­தத்­தில் எரி­சக்தி நிறு­வ­ன­மான சன்­சீப் குழு­மம் கையெ­ழுத்­திட்­டுள்­ளது.

சூரி­யத்­த­கடு மேடை­யோடு மின்­சார சேமிப்பு நிலை­யத்­தை­யும் அந்­நி­று­வ­னம் நிறு­வு­கிறது.

தெற்கு பாத்­தா­மில் உள்ள டுரி­யான்­காங் நீர்த்­தேக்­கத்­தில் இரண்டு பில்­லி­யன் யுஎஸ் டாலர் மதிப்­பி­லான சூரிய சக்தி மின்­த­க­டு­கள் அமைக்­கப்­படும் என்று நேற்று வெளி­யிட்ட அறிக்­கை­யில் சன்­சீப் தெரி­வித்­தது.

அடுத்த ஆண்டு கட்­டு­மா­னப் பணி­கள் தொடங்­கப்­பட்டு 2024ல் நிறை­வு­பெ­றும் என எதிர்­பார்க்­கப்­ ப­டு­கிறது.

இத்­திட்­டத்தை நடை­மு­றைப்­ படுத்த உள்­ளூர் நிறு­வ­ன­மான ‘BP பாத்­தாம்’ நிறு­வ­னத்­து­டன் சன்­சீப் ஒப்­பந்­தம் செய்­துள்­ளது.

மிதக்­கும் சூரி­யத் தகடு சுமார் 2.2 கிகா­வாட் மின்­சா­ரத்தை உற்­பத்தி செய்­யும். சுமார் 1,600 ஹெக்­டர் பரப்­ப­ள­வில் அமை­வ­தால் உல­கின் ஆகப்­பெ­ரிய மிதக்­கும் சூரி­யத் தகடு ேமடை­யாக அது இருக்­கும்.

அதே வளா­கத்­தில் கட்­டப்­படும் எரி­சக்தி சேமிப்பு நிலை­யம் 4,000 மெகா­வாட் மின்­சா­ரத்தை சேமிக்­கும் ஆற்­றலை கொண்­டி­ருக்­கும்.

சூரி­யத் தகடு மூலம் மின்­சா­ரம் உற்­பத்தி செய்­யப்­ப­டு­வ­தால் ஆண்­டுக்கு 1.8 மில்­லி­யன் மெட்­ரிக் டன் கரிம வெளி­யேற்­றத்­தைத் தடுக்க முடி­யும். இது, ஆண்­டுக்கு 400,000 கார்­கள் சாலை­களில் ஓடு­வ­தற்­குச் சம­மா­கும்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!