'பாதுகாவல் அதிகாரிகளின் பணி செடிக்கு தண்ணீர் ஊற்றுவதல்ல'

'பாதுகாவல் அதிகாரிகளின் பணி செடிக்கு தண்ணீர் ஊற்றுவதல்ல'

2 mins read
63ff5cfc-726e-4404-a0bb-8513431ce05e
-

பாது­கா­வல் அதி­கா­ரி­களை அவர்­க­ளுக்­குத் தொடர்பு இல்­லாத வேலைகளில் ஈடுபடுத்த வேண்டாம் என்று சிங்­கப்­பூர் பாது­கா­வல் அதி­கா­ரி­கள் சங்­கம் கேட்­டுக் கொண்­டுள்­ளது.

செடி­க­ளுக்கு தண்­ணீர் ஊற்று­வ­தற்­கும் உணவு வாங்­கு­வ­தற்­கும் மின்விளக்­கு­களை மாற்­று­வ­தற்­கும் குடி­யி­ருப்­பா­ளர்­க­ளின் கடி­தங்­களை கொண்­டு­ வருவதற்கும் அவர்­களை பயன்­ப­டுத்­தக்கூடாது.

சுற்றுக் காவ­லில் ஈடு­ப­டு­வது, சொத்­து­க­ளைப் பாது­காப்­பது, நுழை­வா­யில்­களில் வருபவர்களை கண்­கா­ணிப்­பது, போக்­கு­வ­ரத்தை ஒழுங்குப­டுத்­து­வது போன்றவை அவர்­க­ளின் தலை­யா­யப் பணி­கள் என்று சங்­கம் நேற்று வெளியிட்ட 36 பக்க வழி­காட்­டி­ அறிக்கையில் தெரி­விக்­கப்­பட்­டது.

இத்­த­கைய முக்­கி­யப் பணி ­களுக்கு அப்­பால் மற்ற வேலை­களில் ஈடு­ப­டச் செய்­தால் நீண்­ட­கா­லப் போக்­கில் அவர்­க­ளு­டைய மன­நி­லை பாதிக்­கப்­ப­ட­லாம் என்று அச்­சங்­கத்­தின் தலை­வர் ராஜ் ஜோஷுவா கூறி­னார்.

வாழ்­நாள் கற்­றல் கழ­கத்­தில் நேற்று பாது­கா­வல் அதி­கா­ரி­க­ளுக்­கான வழி­காட்டி வெளி­யி­டப்­பட்­டது.

"மின்விளக்­குகளை மாற்­று­வது, நுழை­வா­யில் மின்­த­டுப்­பு­கள் அல்­லது மின்­சா­ரப் பெட்­டி­யில் ஏற்­பட்­டுள்ள கோளாறுகளை சரிசெய்­வது போன்ற வேலை­கள் பாது­கா­வல் அதி­கா­ரி­க­ளுக்கு வழங்கப்படு கின்றன.

"ஆனால் இத்­த­கைய வேலை­கள் ஆபத்­தா­னவை. உரி­மம் பெற்ற, அனுபவமுள்ள நிபு­ணர்­களே அவற்றை கையாள முடி­யும்," என்று செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசிய தாமஸ் கூறி­னார்.

இது­போன்ற வேலை­களில் ஈடுபட பாது­கா­வல் அதி­கா­ரி­களை சில குடி­யி­ருப்­பா­ளர்­களும் முக­வர்­களும் வற்­பு­றுத்­து­வ­தா­க­வும் அவர் சொன்­னார்.

"அது அவர்­க­ளுக்கு மன உளைச்­சலை ஏற்­ப­டுத்­தும். முகப்­பில் இருப்­ப­தால் எந்­நே­ரத்­தி­லும் எல்­லா­வித வேலை­களும் அவர் களுக்கு கொடுக்­கப்­ப­டு­கின்­றன," என்­றார் அவர்.

பாது­கா­வல் ஊழி­யர் தொழிற்­சங்­கத்­தின் நிர்­வா­கச் செய­லா­ள­ரான திரு ஸ்டீவ் டான், 25 விழுக்­காடு பாது­கா­வல் அதி­கா­ரி­க­ளுக்கு பாது­காப்பு தொடர்பு இல்­லாத வேலை­கள் தரப்­ப­டு­வ­தாக கூறி­னார். 1,002 அதி­கா­ரி­க­ளி­டம் நடத்­தப்­பட்ட ஆய்வு ஒன்றை அவர் சுட்­டிக்­காட்டி பேசி­னார்.

சிங்­கப்­பூர் சமூக அறி­வி­யல் பல்­க­லைக்­க­ழ­கத்­தின் உத­வி­யு­டன் மேற்­கொள்­ளப்­பட்ட ஆய்­வு முடி­வு­கள் மார்ச் மாதம் வெளி­யி­டப்­பட்­டன.

அதில் பாதுகாவல் அதிகாரி களுக்கு வழங்கப்படும் வேலைகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.