வலுவான மூலதனத்துடன் சிங்கப்பூர் வங்கிகள்

வலுவான மூலதனத்துடன் சிங்கப்பூர் வங்கிகள்

1 mins read
5d63cfad-5343-4238-a252-af20ed79ea72
-

இவ்­வாண்டு டிபி­எஸ், யுஓபி, ஓசி­பிசி வங்­கி­கள் வலு­வான நிலைக்­குத் திரும்­பும் என எதிர்­பார்க்­கப் ­ப­டு­கிறது. ஆனால் அவற்­றின் ஈவுத் தொகைக்கு விதிக்­கப்­பட்ட வரம்பு விலக்­கப்­ப­டு­வ­தைப் பொறுத்து அது அமை­யும் என்று ஐஎச்­எஸ் மார்­கிட் எனும் நிறு­வ­னம் தெரி­வித்­துள்­ளது.

வங்­கி­க­ள் வழங்கும் ஈவுத் தொகைக்கு சிங்­கப்­பூர் நாணய ஆணை­யம் வரம்பு விதித்­துள்­ளது.

கடந்த ஆண்டு மேற்­கொள்­ளப்­பட்ட வழக்­க­மான நடை­மு­றை­கள் கார­ண­மாக வங்­கி­கள் வலு­வான மூல­த­னத்­தைப் பெற்­றுள்­ளன. வங்­கி­க­ளின் பொரு­ளி­யல் எதிர்­கா­ல­மும் மேம்­பட்­டுள்­ளது.

இத­னால் ஈவுத் தொகை மீதான வரம்பை ஆணை­யம் அகற்­றும் என்று தர­வுப் பகுப்­பாய்வு நிறு­வ­னம் நம்­பு­கிறது.

பங்கு மதிப்பு அதி­க­ரிக்­கும் சூழ்­நி­லை­யில் 2021 நிதி­யாண்­டில் சிங்­கப்­பூ­ரின் மூன்று வங்­கி­களும் பங்­குக்கு 40 விழுக்­காடு என்ற விகி­தத்­தில் ஈவுத்­தொ­கையை அதி­க­ரிக்­கும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

இதை அடிப்­ப­டை­யா­கக் கொண்­டால் வழங்­கப்­படும் ஈவுத்­தொ­கை­யின் மொத்த மதிப்பு 5.1 பில்­லி­யன் யுஎஸ் டால­ராக இருக்­கும் என கணிக்­கப்­பட்­டுள்­ளது. இது, 2020ல் 3.6 பில்­லி­யன் யுஎஸ் டால­ராக இருந்­தது. சிறப்­பான சந்தை சூழ்­நிலையில் டிபி­எஸ், யுஓபி, ஓசி­பிசி வங்­கி­கள் முறையே பங்­குக்கு $1.17, $1,18, $0,52 அள­வில் ஈவுத்­தொ­கையை வழங்­கும் என ஐஎச்­எஸ் மார்கிட் எதிர்­பார்க்கிறது.