இணையத்தில் பெண்களை பாதுகாக்க புதுத் திட்டம்

இணையத்தில் பெண்களை பாதுகாக்க புதுத் திட்டம்

2 mins read
5ee363a9-8adc-4cfd-8fc8-e10f4edb3dd4
-

இணை­யத்­தில் பெண்­க­ளுக்­குக் கூடு­தல் பாது­காப்பு வழங்­கும் நோக்­கு­டள் புத்­தாக்க தீர்­வு­க­ளைக் கொண்­டு­வ­ரும் முயற்­சி­யில் 40 குழுக்­கள் இறங்­கி­யுள்­ளன.

இணை­யம்­வழி மேற்­கொள்­ளப்­படும் பாலி­யல் ரீதி­யான துன்­பு­றுத்­தல்­கள் போன்­ற­வற்­றி­லி­ருந்து பெண்­க­ளைப் பாது­காப்­பது முயற்­சி­யின் இலக்கு.

'கம்­யூ­னிட்டி ஹேக்­கத்­தான்' முயற்சியின்கீழ் சமூக அள­வில் மென்­பொ­ருள் நிபு­ணர்­கள் ஒன்­று­கூடி இணை­யத்­தில் செயல்­ப­டுத்­தக்­கூ­டிய தீர்­வு­களை வரை­யும் நட­வ­டிக்­கையை மேற்­கொள்­வர்.

'ஏ­ஃப்ஏ' எனப்­படும் 'சிங்­கப்­பூர் டுகெ­தர் அல­யன்ஸ் ஃபார் ஏக்­‌ஷன்' திட்­டத்­தின்­கீழ் இணை­யம்­வழி வரும் அபா­யங்­க­ளைக் கையாள மேற்­கொள்­ளப்­படும் முதல் முயற்சி இது.

'ஏ­ஃப்ஏ' திட்­டம், தொடர்பு, தக­வல் அமைச்சின் கீழ் வரும். முயற்­சி­யில் ஈடு­பட்­டுள்ள 40 குழுக்­களில் பணி­யில் இருக்­கும் வழக்கறிஞர்கள், அர­சாங்க ஊழி­யர்­கள் உள்­ளிட்­டோர் அடங்­கு­வர்.

தொடர்பு, தக­வல் அமைச்சு, 'டிபி­எஸ்' வங்கி, சிங்­கப்­பூர் நீதித்­துறை ஆகி­யவை இணைந்து 'ஹேக்­கத்­தான்' முயற்­சியை மேற்­கொள்­கின்­றன.

இணை­யத்­தில் பெண்­க­ளுக்­குப் பாது­காப்பு வழங்­கு­வ­தன் தொடர்­பில் கடந்த ஆறு மாதங்­க­ளாக சமூ­கத்­தி­னர், தொழில்­து­றை­யி­னர், அர­சாங்­கம் ஆகிய முத்­த­ரப்­பும் ஆக்­க­பூர்­வ­மான பேச்­சு­வார்த்தை நடத்­தி­யுள்­ள­னர் என்றார் வெளி­யு­றவு, தேசிய வளர்ச்சி ஆகி­ய­வற்­றுக்­கான மூத்த துணை­ய­மைச்­சர் சிம் ஆன். முயற்­சி­யில் பங்­கேற்­பா­ளர்­கள் உற்­சா­க­மாக ஈடு­பட்­ட­து­டன் தர­மான தீர்­வு­க­ளை­யும் முன்­வைத்­ததை அவர் சுட்டினார்.

அதைக் கண்டு தாம் மகிழ்ச்­சி­ய­டைந்­த­தாக இணைய அபா­யங்­க­ளைக் கையாள்­வ­தற்­கான 'ஏ­ஃப்ஏ' திட்­டத்­தின் தலை­வர்­களில் ஒரு­வ­ரு­மான அவர் சொன்­னார்.

பங்­கேற்­பா­ளர்­கள் தங்கள் தீர்­வு­களை வரும் செப்­டம்­பர் மாதம் 17ம் தேதிக்­குள் சமர்ப்­பிக்­க­வேண்­டும். பின்­னர் அக்­டோ­பர் மாதம் ஏழாம் தேதி­யன்று நீதி­ப­தி­க­ளின் முன்­னி­லை­யில் அவற்றை சமர்ப்­பிக்­க­வேண்­டும்.

அம்­மா­தம் 28ம் தேதி­யன்று வெற்­றி­யா­ளர்­கள் அறி­விக்­கப்­ப­டு­வர்.