ஒலிம்பிக் அஞ்சல் தலைகள்

ஒலிம்பிக் அஞ்சல் தலைகள்

1 mins read
f823a119-b871-42c0-bd32-507a24172b82
ஒலிம்பிக் விளையாட்டுகளைக் கொண்டாடும் அஞ்சல் தலைகள். படம்: சிங்போஸ்ட் -

தோக்­கி­யோ­வில் நடை­பெ­ற­வுள்ள ஒலிம்­பிக் விளை­யாட்­டு­க­ளைக் கொண்­டா­டும் வகை­யில் சிங்­போஸ்ட் ஆறு அஞ்­சல் தலை­களை வெளி­யி­டு­கிறது.

ஒலிம்­பிக்­கில் சிங்­கப்­பூர் பங்­கேற்­க­வுள்ள சில விளை­யாட்­டு­க­ளைச் சித்­தி­ரிக்­கும் ஓவி­யங்­கள் அஞ்­சல் தலை­களில் இடம்­பெ­றும். நீச்­சல், முக்­கு­ளிப்பு, பூப்­பந்து உள்­ளிட்­டவை அவற்­றில் அடங்­கும்.

வரும் வெள்­ளிக்­கி­ழமை முதல் ஒலிம்­பிக் கருப்­பொ­ரு­ளைக் கொண்ட அஞ்­சல் தலை­களை வாங்­க­லாம். அவற்­றின் விலை 30 காசுக்­கும் 1.40 வெள்­ளிக்­கும் இடைப்­பட்­டி­ருக்­கும்.

அனைத்து தபால் நிலை­யங்­கள், அஞ்­சல் தலை கடை­கள், சிங்­போஸ்­டின் இணை­யத்­த­ளம் ஆகி­ய­வற்­றில் அஞ்­சல் தலை­களை வாங்­க­லாம்.

வரும் வெள்­ளிக்­கி­ழமை முதல் அடுத்த மாதம் எட்­டாம் தேதி வரை ஒலிம்­பிக் விளை­யாட்­டு­கள் நடை­பெ­றும். சென்ற ஆண்டு நடை­பெ­ற­வி­ருந்த விளை­யாட்­டு­கள், கொவிட்-19 கிரு­மிப் பர­வல் கார­ண­மாக இந்த ஆண்­டுக்கு ஒத்­தி­வைக்­கப்­பட்­டன. ஒலிம்­பிக் விளை­யாட்­டு­களை வர­லாற்­றில் இரண்­டா­வது முறை­யாக ஏற்று நடத்­து­கிறது ஜப்­பான்.

ஏற்­கெ­னவே 1964 ஒலிம்­பிக் விளை­யாட்­டு­கள் அங்கு அரங்­கே­றின.

18வது முறை­யாக ஒலிம்­பிக் விளை­யாட்­டு­களில் பங்­கேற்­க­வுள்­ளது சிங்­கப்­பூர்.

சென்ற ஒலிம்­பிக் விளை­யாட்­டு­களில் வர­லாற்­றில் முதன்­மு­றை­யாக சிங்­கப்­பூர் தங்­கம் வென்­றது.

100 மீட்­டர் வண்­ணத்­துப்­பூச்சி பாணி நீச்­ச­லில் ஜோசஃப் ஸ்கூ­லிங் சிங்­கப்­பூ­ருக்­குத் தங்­கம் வென்­றார்.