வேண்டுமென்றே தாக்குதல்: சிறைத் தண்டனை

வேண்டுமென்றே தாக்குதல்: சிறைத் தண்டனை

1 mins read
63eb47e4-5be5-49d0-a41d-020c842c51c6
-

டாக்சி ஓட்­டு­நரை அடித்த குற்­றத்­திற்­காக மொத்த விற்­பனை நிறு­வ­னத்­தின் தலைமை நிர்­வாகி ஒரு­வ­ருக்கு இரண்டு வாரம் சிறைத் தண்­டனை விதிக்­கப்­பட்­டுள்­ளது.

வேண்­டு­மென்றே ஒரு­வ­ருக்­குக் காயம் ஏற்­ப­டுத்­திய குற்­றச்­சாட்டை ஆர் என் ஜே யூனி­யன் நிறு­வ­னத்­தைச் சேர்ந்த முக­மது அல்வீ ரானா ஒப்­புக்­கொண்­டார். அவ­ருக்கு இப்­போது வயது 26.

பங்­க­ளா­தே­ஷி­லி­ருந்து வந்து இப்­போது சிங்­கப்­பூர் குடி­ம­க­னாக இருக்­கும் அவர், சம்­பந்­தப்­பட்ட டாக்சி ஓட்­டு­நர் தன்னை இன ரீதி­யக இழி­வு­ப­டுத்­திப் பேசி­ய­தா­கச் சொன்­னார். ஆனால், தான் அவ்­வாறு செய்­ய­வில்லை என்­றார் ராஜ­துரை துரை­சாமி என்ற அந்த டாக்சி ஓட்­டு­நர். அவ­ருக்கு வயது 58. அடித்­த­தால் ஏற்­பட்ட காயங்­க­ளுக்கு சிகிச்சை பார்க்க அல்வீ திரு ராஜ­து­ரைக்கு 110 வெள்ளி இழப்­பீ­டாக வழங்­கி­னார்.

வேண்­டு­மென்றே ஒரு­வ­ருக்­குக் காயம் ஏற்­ப­டுத்­திய குற்­றச்­சாட்டு நிரூ­பிக்­கப்­பட்­டால் குற்­ற­வா­ளிக்கு ஈராண்டுகள் வரை­யி­லான சிறைத் தண்­டனை, 5,000 வெள்ளி வரை­யி­லான அப­ரா­தம் அல்­லது இரண்­டும் விதக்­கப்­ப­ட­லாம்.