ஆழ்கடல் தற்காப்பில் களமிறங்கும் ஆளில்லா படகுகள்

ஆழ்கடல் தற்காப்பில் களமிறங்கும் ஆளில்லா படகுகள்

1 mins read
e7f2a58d-c9c6-4219-a7c0-4d03bc8bcf40
கடலடித் தற்காப்பு நடவடிக்கைகளுக்கு கைகொடுக்கும் சிங்கப்பூர் கடற்படையின் ஆளில்லா படகுகள். இதுபோன்ற செயல்முறை உலகளவில் தயார்நிலையில் இருப்பது இதுவே முதல் முறை. கடந்த சுமார் 10 ஆண்டுகளாக சிங்கப்பூரில் ஆளில்லா படகுகள் சோதனையிடப்பட்டு வருகின்றன. படம்: தற்காப்பு அமைச்சு -

சிங்­கப்­பூர் கடற்­ப­டை­யின் யுஎஸ்வி எனப்­படும் ஆளில்லா பட­கு­க­ளால், கடல் கண்ணி வெடி­க­ளைச் செய­லி­ழக்­கச் செய்­ய­மு­டி­யும் என்­பது உறு­தி­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. அவை இப்­போது தயார்­நி­லை­யில் இருப்­ப­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இந்த ஆளில்லா பட­கு­கள் கரை­யி­லி­ருந்து இயக்­கப்­படும். இத்­த­கைய சாத­னங்­க­ளைப் பயன்­ப­டுத்­து­வ­தன் மூலம் தேவைப்­படும் ஆள் பலத்­தைக் கணி­ச­மா­கக் குறைக்­க­லாம் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது. கடல் கண்ணி வெடி­களை அடை­யா­ளம் கண்டு அகற்­றத் தேவை­யான நேரத்­தை­யும் அவை குறைக்க உத­வும். சிங்­கப்­பூர் கடற்­ப­டை­யின் இரண்டு ஆளில்லா பட­கு­கள் கடந்த ஜன­வரி மாதம் 29ம் தேதி­யன்று தென் தீவு­க­ளுக்கு அருகே நிகழ்ந்த பயிற்­சி­யின்­போது கட­ல­டி­யில் இருந்த மாதிரி வெடியை வெற்­றி­க­ர­மா­கச் செய­லி­ழக்­கச் செய்­தன. இனி இந்த ஆளில்லா பட­கு­க­ளால் கட­ல­டி­யில் இருக்­கக்­கூ­டிய அபா­யங்­களை அடை­யா­ளம் கண்டு முறி­ய­டிக்­க­மு­டி­யும்.

உல­க­ள­வில் இத்­த­கைய தற்காப்புச் செயல்முறை தயார்­நி­லை­யில் இருப்­பது இது முதல் முறை. சுமார் 10 ஆண்­டு­க­ளுக்கு முன்­னரே ஆளில்லா பட­கு­க­ளைக் கொண்டு சிங்­கப்­பூர் கடற்­படை சோதனை நடத்­தி­யது.

2018ஆம் ஆண்­டில் ஆளில்லா பட­கு­கள் அறி­மு­க­மா­யின.

ஆனால் அவற்­றால் கடல் கண்ணி வெடி­களை அடை­யா­ளம் காண முடி­யுமே தவிர அவற்­றைச் செய­லி­ழக்­கச் செய்­ய­மு­டி­யாது.