பேத்தியுடன் பாலியல் உறவு: ஆடவருக்கு நான்கரை ஆண்டு சிறைத் தண்டனை

பேத்தியுடன் பாலியல் உறவு: ஆடவருக்கு நான்கரை ஆண்டு சிறைத் தண்டனை

1 mins read
6bd7ffc4-f97f-4dbc-88ad-b0db582db231
-

தனது 14 வயது பேத்­தி­யு­டன் இரண்டு முறை பாலி­யல் உறவு வைத்­துக்­கொண்ட போதைப்­பொ­ருள் குற்­ற­வா­ளிக்கு நான்­கரை ஆண்டு சிறைத் தண்­டனை விதிக்­கப்­பட்­டுள்­ளது. அந்த 57 வயது நபர் குறைந்த வயது பெண்­ணு­டன் பாலி­யல் உறவு வைத்­துக்­கொண்­ட­தா­கப் பதி­வான இரண்டு குற்­றச்­சாட்­டு­க­ளை­யும் ஒப்­புக்­கொண்­டார்.

திரு­டி­ய­தா­க­வும், சிறு­நீர் சோத­னைக்குப் போகாததாகவும் பதி­வான மேலும் இரண்டு குற்­றச்­சாட்­டு­க­ளை­யும் அவர் ஒப்­புக்­கொண்­டார். பாதிக்­கப்­பட்ட பெண்­ணின் அடை­யா­ளத்தை வெளி­யி­டத் தடை உத்­த­ரவு உள்­ளதால் ஆட­வ­ரின் அடை­யா­ள­மும் வெளி­யி­டப்­ப­ட­வில்லை. குறைந்த வயது நப­ரு­டன் பாலி­யல் உறவு வைத்­துக்­கொண்டது நிரூ­பிக்­கப்­பட்­டால் குற்­ற­வா­ளிக்கு 10 ஆண்டு வரை­யி­லான சிறைத் தண்­டனை, அப­ரா­தம் அல்­லது இரண்­டும் விதிக்­கப்­ப­ட­லாம்.