மகளைப் பாலியல் ரீதியாக துன்புறுத்திய தந்தைக்கு 29 ஆண்டு சிறை, பிரம்படி

மகளைப் பாலியல் ரீதியாக துன்புறுத்திய தந்தைக்கு 29 ஆண்டு சிறை, பிரம்படி

1 mins read
5fedc190-efd1-4e45-b778-249064143bad
-

ஐந்­தாண்­டு­க­ளா­கத் தனது மக­ளைத் தொடர்ந்து பாலி­யல் ரீதி­யா­கத் துன்­பு­றுத்­திய 46 வயது ஆட­வ­ருக்கு 29 ஆண்டு சிறைத் தண்­டனை விதிக்­கப்­பட்­டுள்­ளது. அவ­ருக்கு 24 பிரம்­ப­டி­களும் தண்­ட­னை­யாக விதிக்­கப்­பட்­டது.

15 பாலி­யல் வன்­மு­றைக் குற்­றச்­சாட்­டு­கள் அவர் மீது பிதி­வு­செய்­யப்­பட்­டி­ருந்­தன. மக­ளின் 10லிருந்து 14காவது வய­துக்கு இடைப்­பட்ட காலத்­தில் தந்தை அவ­ரைப் பாலி­யல் ரீதி­யா­கத் துன்­பு­றுத்­தி­யி­ருக்­கி­றார்.

திரு­ம­ணத்­திற்கு முன்பு மகள் தனது காத­ல­னு­டன் பாலி­யல் உறவு வைத்­துக்­கொண்­டது தனக்­குத் தெரி­ய­வந்­தது, அத­னால் அவர் தன் மீது போலி­யா­கக் குற்­றம் சுமத்­தி­ய­தா­கக் குற்­ற­வாளி வழக்கு விசா­ர­ணை­யின்­போது கூறி­னார்.

பாதிக்­கப்­பட்ட பெண்­ணின் பெயரை வெளி­யி­ட நிதிமன்றம் தடை விதித்துள்ளது.