அமைதியாக காணப்பட்ட சந்தைகள், காப்பிக்கடைகள்

அமைதியாக காணப்பட்ட சந்தைகள், காப்பிக்கடைகள்

2 mins read
0a56a108-a0d4-4208-a19c-1eed3dacfbd9
தியோங் பாரு சந்தையில் பல மீன் கடைகள் நேற்று மூடப்பட்டிருந்தன. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

கொவிட்-19 கட்டுப்பாடுகள் மீண்டும் கடுமையாக்கப்பட்டதன் எதிரொலி

சிங்­கப்­பூ­ரில் நேற்று கொவிட்-19 பாது­காப்பு விதி­மு­றை­கள் மீண்­டும் கடு­மை­யாக்­கப்­பட்­ட­தைத் தொடர்ந்து ஈரச்­சந்­தை­கள், உண­வங்­காடி நிலை­யங்­கள், காப்­பிக்­கடை­கள் ஆகிய இடங்­கள் வழக்­கத்­திற்கு மாறாக அமை­தி­யா­கக் காணப்­பட்­டன.

தெலுக் பிளாங்கா, கேலாங் பாரு, ஆமோய் ஸ்தி­ரீட், தோ பாயோ வெஸ்ட், பொத்­தோங் பாசிர் ஆகிய பகு­தி­களில் உள்ள ஈரச்­சந்­தை­களில் நில­வ­ரத்­தைக் கண்­ட­றிய ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்­திக்­குழு நேற்­றுக் காலை அங்கு சென்­றது.

அங்­குள்ள பல மீன்­க­டை­கள் மூடப்­பட்­டி­ருந்­தன. கடைக்­கா­ரர்­கள், தங்­க­ளுக்கு 'கொவிட்-19 தொற்று இல்லை' என்­பதை பிசி­ஆர் பரி­சோ­தனை முடி­வு­கள் காட்­டிய பின்­னரே கடை­க­ளைத் திறக்க முடி­யும்.

இங்­குள்ள சந்­தை­க­ளுக்­குள் நுழைய டிரேஸ்­டு­கெ­தர் செயலி அல்­லது கரு­வி­யைக் கொண்டு பதி­வு­செய்­வது கட்­டா­ய­மாக்­கப்­பட்டுள்­ளது.

எடுத்­துக்­காட்­டாக, கேலாங் பாரு சந்தை வளா­கத்­தில் பிளாஸ்­டிக் தடுப்­பு­வே­லி­கள் போடப்­பட்­டுள்­ளன. சந்­தைக்­குள் நுழை­ய­வும் அங்­கி­ருந்து வெளி­யே­ற­வும் தனித்­தனி வழி­கள் உள்­ளன.

வாடிக்­கை­யா­ளர்­கள் டிரேஸ்­டு­கெ­தரை கொண்டு பதி­வு­செய்­வதை உறு­தி­செய்ய சந்­தை­யின் நுழை­வாயில், வெளி­வா­யில் பகு­தி­களில் பாது­காப்பு இடை­வெளி அதி­கா­ரி­கள் பணி­யில் இருந்­த­னர்.

புளோக் 201C தெம்­ப­னிஸ் ஸ்திரீட் 21, தெலுக் பிளாங்கா கிரெ­சண்ட் புளோக் 11 ஆகிய இடங்­களில் உள்ள இரு ஈரச்­சந்­தை­ களுக்­கும் ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்­திக்­குழு சென்­றது. அங்­கும் இதே நடை­முறை நடப்­பில் உள்­ளது.

உண­வங்­காடி நிலை­யங்­களும் காப்­பிக்­க­டை­களும் நேற்று அமை­தி­யாக காணப்­பட்­டன. அங்கு அமர்ந்து உண­வ­ருந்த தடை விதிக்­கப்­பட்­டுள்­ளது. உண­வைப் பொட்­ட­லம் கட்டி வாங்­கிச் செல்ல மட்­டுமே அனு­மதி உண்டு.

மேலும், சமூக ஒன்­று­கூ­டல் எண்­ணிக்­கை­யும் ஐந்­தி­லி­ருந்து இரண்­டா­கக் குறைக்­கப்­பட்­டுள்­ளது.

இங்­குள்ள ஐந்து உண­வ­ங்­காடி நிலை­யங்­க­ளி­லும் இரு காப்­பிக்­கடை­க­ளி­லும் ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்­திக்­குழு நேற்று நில­வ­ரத்­தைக் கண்­ட­றிந்­தது.

மக்­கள் இரு­வர் கொண்ட குழுக்­க­ளா­க­வும் தனி­யா­க­வும் காணப்­பட்­ட­னர்.

தெலுக் பிளாங்கா கிரெ­சண்ட் புளோக் 11 சந்தை மற்­றும் உணவு நிலை­யத்­தில் பாதி­ய­ளவு உண­வுக்­கடை­கள் மூடப்­பட்­டி­ருந்­தன. பாது­காப்பு இடை­வெ­ளித் தூதர்­கள் இரு­வர் கண்­கா­ணிப்­புப் பணி­யில் ஈடு­பட்­டி­ருந்­த­னர்.

சமூக அள­வில் கிரு­மித்­தொற்று அதி­க­ரித்­துள்ள நிலை­யில், வெளியே செல்ல மக்­கள் அஞ்­சு­வதால் கூட்­டம் குறைந்­து­விட்­ட­தாக கடைக்­கா­ரர்­கள் கூறி­னர்.