இரண்டாம் கட்ட (அதிகரிக்கப்பட்ட விழிப்புநிலை) நடைமுறைகள் நடப்பில் உள்ள தற்போதைய சூழலில் விநியோக ஓட்டுநர்கள், டாக்சி மற்றும் தனியார் வாடகை கார் ஓட்டுநர்கள், முன்களப் பணியாளர்கள் ஆகியோர் அமர்ந்து உணவருந்துவதற்கான இடங்கள் அமைக்கப்பட்டிருப்பதாக தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் தலைமைச் செயலாளர் இங் சீ மெங் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஃபேஸ்புக் பதிவு ஒன்றை வெளியிட்ட அவர், "இன்று நான் மதிய உணவை வாங்கி வீட்டிற்கு எடுத்துச் சென்று சாப்பிட்டேன். எனினும், நமது முன்களப் பணியாளர்கள் வெளியில் வேலையை முடிக்க வேண்டியிருக்கும்.
"உங்களுக்கு நற்செய்தி. எங்களது பங்காளிகளுடன் சேர்ந்து நீங்கள் உணவருந்துவதற்கான இடங்களை அமைத்து தந்துள்ளோம். இது உங்களுக்கு உதவியாக இருக்கும் என நம்புகிறோம்," என்றார்.
ஊழியர்கள் உணவருந்துவதற்கான இடங்களை கீழே உள்ள ஃபேஸ்புக் பக்கத்தில் காணலாம்:
www.facebook.com/NTUCDeliveryChampions/posts/ 136624555280054.
கொவிட்-19 கட்டுப்பாடுகள் மீண்டும் கடுமையாக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து உணவுக் கடைகளில் அமர்ந்து உணவருந்த நேற்று முதல் ஆகஸ்ட் 18ஆம் தேதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது.

