சிஎச்ஐஜே உயர்நிலைப் பள்ளி (தோ பாயோ) மாணவிக்கு கொவிட்-19 கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. அதை அடுத்து, அப்பள்ளி மாணவர்கள் நேற்று முதல் வீட்டிலிருந்து பயிலும் நடைமுறைக்கு மாறினர்.
குடும்ப உறுப்பினர் மூலம் அந்த மாணவிக்குக் கிருமி தொற்றியதாக அறியப்படுகிறது.
பாதிக்கப்பட்ட மாணவி, கடைசியாக கடந்த திங்கட்கிழமை பள்ளிக்குச் சென்றிருந்தார்.
வளாகத்தைக் கிருமிநாசினி கொண்டு முழுமையாகச் சுத்திகரிப்பதற்காக வீட்டிலிருந்து பயிலும் நடைமுறை செயல்படுத்தப்பட்டதாக அப்பள்ளி குறிப்பிட்டது.
உயர்நிலை 2லிருந்து 5 வரை பயிலும் மாணவர்கள் இன்று பள்ளிக்குத் திரும்புவர்.
உயர்நிலை 1ல் பயிலும் மாணவர்கள், அடுத்த புதன்கிழமை பள்ளிக்குத் திரும்புவர்.
பாதிக்கப்பட்ட மாணவியுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் நலமாக இருப்பதாகவும் முன்னெச்சரிக்கையாக அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

