'கட்டுப்பாடுகள் மீண்டும் கடுமையாவதற்கு கேடிவி குழுமத்தை சேர்ந்தவர்களின் பொறுப்பற்ற செயல்கள் காரணமல்ல'

'கட்டுப்பாடுகள் மீண்டும் கடுமையாவதற்கு கேடிவி குழுமத்தை சேர்ந்தவர்களின் பொறுப்பற்ற செயல்கள் காரணமல்ல'

2 mins read
3e8f865b-53ae-4936-8f19-a806021e4af4
-

சிங்­கப்­பூர் இரண்­டாம் கட்ட (அதி­க­ரிக்­கப்­பட்ட விழிப்­பு­நிலை) நடை­மு­றைக்­குத் திரும்ப கேடிவி கேளிக்­கைக்­கூட கிரு­மித்­தொற்­றுக் குழு­மத்­து­டன் தொடர்­பு­டை­யோ­ரின் பொறுப்­பற்ற நடத்தை கரா­ண­மல்ல என்று சுகா­தார அமைச்­சர் ஓங் யீ காங் விளக்­க­ம­ளித்­துள்­ளார்.

இது­கு­றித்து நேற்று முன்­தி­னம் ஃபேஸ்புக் பதிவு ஒன்றை வெளி­யிட்ட திரு ஓங், மற்­ற­வர்­க­ளைப்­போல தாமும் அவர்­க­ளின் செய­லுக்­காக வருத்­த­ம­டை­வ­தா­கச் சொன்­னார்.

ஆயி­னும், கேடிவி கிரு­மித்­தொற்­றுக் குழு­மத்­தைக் கட்­டுப்­ப­டுத்­தி­வி­ட­லாம் என்று கொவிட்-19 கிரு­மிப் பர­வலை எதிர்­கொள்­ளும் அமைச்­சு­கள்­நி­லைப் பணிக்­குழு எண்­ணி­யது.

தொடக்­கத்­தில் கட்­டுப்­பா­டு­கள் கடு­மை­யாக்­கப்­பட்­டும் உண­வுக் கடை­களில் அமர்ந்து உண்ண அனு­மதி அளிக்க பணிக்­குழு முடி­வெ­டுத்­தி­ருந்­தது.

இப்­போது மீண்­டும் பழைய கட்டுப்­பா­டு­க­ளுக்­குத் திரும்­பி­ய­தற்­கான கார­ணங்­கள் என்ன என்­பது குறித்­தும் ஒரு­சி­லர் செய்த தவ­று­க­ளுக்­காக அனை­வ­ருமே விளை­வு­களை அனு­ப­விக்க வேண்­டுமா என்­றும் வாட்ஸ்­அப்­பில் உள்ள தமது நண்­பர்­கள் உள்­ளிட்ட சிலர் தம்­மி­டம் வின­வி­ய­தாக அமைச்­சு­கள்­நிலைப் பணிக்­கு­ழு­வின் இணைத் தலை­வ­ரான திரு ஓங் குறிப்­பிட்­டார்.

கடந்த சில நாட்­க­ளாக கேடிவி குழு­மத்­தில் ஏற்­பட்­டுள்ள கிரு­மித்­தொற்று எண்­ணிக்கை குறைந்­துள்­ளதை அவர் சுட்­டி­னார்.

மாறாக, இரண்­டாம் கட்­டக் கட்­டுப்­பா­டு­க­ளுக்­குத் திரும்­பி­ய­தற்கு ஜூரோங் மீன்­பி­டித் துறை­மு­கக் கிரு­மித்­தொற்­றுக் குழு­மமே கார­ணம் என்று திரு ஓங் தெரி­வித்­தார்.

"நேர்­மை­யான முறை­யில் பிழைப்பு நடத்­திக்­கொண்­டி­ருந்த மீன்­க­டைக்­கா­ரர்­களும் கடை உத­வி­யா­ளர்­களும் துறை­மு­கத்­தில் கிரு­மித்­தொற்­றுக்கு உள்­ளா­கி­னர். பல்­வேறு சந்­தை­க­ளுக்கு அவர்­கள் சென்று வேலை பார்த்­த­தில் சமூ­கத்­தில் மேலும் பல­ரைக் கிருமி தொற்­றி­யது," என்று திரு ஓங் கூறி­னார்.

இன்­னும் தடுப்­பூசி போட்­டுக்­கொள்­ளாத மூத்­தோர் பலர் சந்­தை­க­ளுக்­குச் சென்­றதை அவர் சுட்­டி­னார்.

"இது­தான் அதிக கவலை அளிக்­கக்­கூ­டி­யது. கட்­டுப்­ப­டுத்த முடி­யாத அள­விற்கு கிரு­மித்­தொற்று கூடும் அபா­யத்தை நாம் எதிர்­நோக்­கு­கி­றோம்," என்று அவர் எச்­ச­ரித்­தார்.

"எனவே நாம் முன்­கூட்­டியே சமூக நட­வ­டிக்­கை­க­ளைக் கட்­டுப்­படுத்த வேண்­டும்," என்று திரு ஓங் கூறி­னார்.

உண­வுக்­க­டை­களில் இது­வரை எவ­ருக்­கும் கிரு­மித்­தொற்று ஏற்­படாத நிலை­யில், அங்கு அமர்ந்து உண­வ­ருந்­து­வ­தற்­குத் தடை விதித்­துள்­ள­தற்­கான கார­ணம் குறித்­தும் ஓர் எடுத்­துக்­காட்டு மூலம் திரு ஓங் விளக்­கி­னார்.

"உண­வ­ருந்த ஐந்து பேர் ஒன்­றாக சந்­திக்­கி­றார்­கள். அவர்­கள் ஒவ்­வொ­ரு­வ­ரின் வீட்­டி­லும் ஐந்து பேர் இருக்­கி­றார்­கள். அந்த ஐவ­ரும் ஐந்து நண்­பர்­க­ளைச் சந்­திக்­கி­றார்­கள். இதன் மூலம் 125 பேரி­டம் கிருமி பர­வு­வ­தற்­கான சாத்­தி­யம் ஏற்­ப­டு­கிறது," என்று திரு ஓங் எடுத்­து­ரைத்­தார்.

"இதன் மூலம் ஜூரோங் மீன்­பி­டித் துறை­மு­கக் கிரு­மித்­தொற்­றுக் குழு­மம் மிக வேக­மா­கப் பெரு­கி­வி­டும்," என்று எச்­ச­ரித்­தார் அவர்.

மக்­கள்­தொ­கை­யில் 50 விழுக்­காட்­டி­னர் ஏற்­கெ­னவே தங்­க­ளது இரண்டு தடுப்­பூ­சி­க­ளை­யும் போட்டுக்கொண்டதாக திரு ஓங் சுட்­டி­னார்.