பதின்ம வயது தாயார்களின் எண்ணிக்கை குறைகிறது

1 mins read
a35b2abb-f817-4ecd-9196-6bdee65fcb14
-

சிங்கப்பூரில் மேலும் குறைவான பெண்கள் தங்கள் பதின்ம வயதில் தாய்மை அடைவதாக அண்மை புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.

கடந்த ஆண்டில், 256 குழந்தைகள் 19 வயதுக்கும் குறைவான பெண்களுக்குப் பிறந்தனர். இது, 2019ஆம் ஆண்டில் பிறந்த 280 பிள்ளைகளைக் காட்டிலும் 8.6 விழுக்காடு குறைவு. பதின்ம வயதினருக்குப் பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை கடந்த பத்து ஆண்டுகளாகக் குறைந்து வருகிறது.

கடந்த ஆண்டின் எண்ணிக்கை 2011ல் பதிவான 624ஐவிட பாதியளவுக்கும் குறைவு.

கருத்தரிப்புக் குறித்த விவரங்கள், முன்பைக் காட்டிலும் இப்போதைய இளையர்களுக்கு விவரமாகத் தெரிவதாக பாதிக்கப்பட்ட பெண்களுடன் பணியாற்றும் மனநல ஆலோசகர்கள் கூறுகின்றனர். அத்துடன், கருத்தரித்துள்ள இளையர்கள் சிலர், தங்களது கருவைக் கலைக்காமல் இருக்க முடிவு செய்வதாக இவர்கள் கூறுகின்றனர்.

இந்தப் போக்கு நல்லதுதன் என்றும் பொதுவாகவே பதின்ம வயதினர் உடல் நீதியாகவும் மன ரீதியாகவும் சமூக ரீதியாகவும் தயாராக இல்லை என்று பேப்ஸ் என்ற பதின்ம வயது கர்ப்பிணிகளுக்கான ஆதரவு குழு தெரிவித்தது.