'ரிவர் வேலி ஹை' பள்ளியில் கொலை - கல்வியமைச்சரின் அறிக்கை அடுத்த வாரம்

'ரிவர் வேலி ஹை' பள்ளியில் கொலை - கல்வியமைச்சரின் அறிக்கை அடுத்த வாரம்

1 mins read
6425eb0c-e04c-4892-b965-9f860a25333e
-

கல்வியமைச்சர் சான் சுன் சின், ரிவர் வேலி ஹை பள்ளியில் மாணவர் கொல்லப்பட்ட சந்தப்பர்த்தின் தொடர்பில் அமைச்சர் அறிக்கை ஒன்றை அடுத்த வாரம் வெளியிடுவார். இச்சம்பவம் குறித்த பெற்றோர்கள் மற்றும் சமூகத்தினரின் அக்கறைகளைப் பற்றி பேசும்.

பெற்றோர்களிடத்திலிருந்தும் சமூகத்திடமிருந்தும் அக்கறைகள் நிச்சயம் எழும் எனத் தமது பேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்ட திரு சான், மாணவர்களுக்கு உரிய உதவிகளை வழங்க பள்ளிகளுக்கு என்னெ ஆதரவு கொடுக்கப்படுகிறது என்பது குறித்த வினாக்கள் இருப்பதாகக் கூறினார்.

சம்பவத்தின்போது விவேகத்துடன் நடந்துகொண்ட பள்ளி ஆசிரியர்களையும் பணியாளர்களையும் பாராட்டிய திரு சான், பொதுமக்கள் ஒன்றுசேர்ந்து அஞ்சலி செலுத்தியதும் உதவ முந்திக்கொள்ளும் மனநல நிபுணர்கள் சமூகத்தையும் மெச்சினார்.

கொல்லப்பட்ட மாணவருடனும் கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட மாணவருடனும் நெருங்கிய தொடர்பைக் கொண்டுள்ள பள்ளி நண்பர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் மனநல ஆதரவு கொடுக்கப்படுவதற்கான ஏற்பாடுகள் இருப்பதாக கல்வியமைச்சு தெரிவித்தது.