பரிசுப்பணம் இந்தியாவில்தான் அதிகம்

பரிசுப்பணம் இந்தியாவில்தான் அதிகம்

1 mins read
7906ffd7-ddba-47bb-a70e-c55b7758c200
-

புதுடெல்லி: ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் இந்திய விளையாட்டாளர்கள் தங்கம் வென்றால் உலகிலேயே அவர்களுக்குத்தான் அதிகமான பரிசுப்பணம் கிடைக்கும். அந்நாட்டின் உத்தரப் பிரதேசம், அரியானா, ஒடிசா, சண்டிகர், சட்டீஸ்கர் ஆகிய மாநிலங்கள் தங்கம் வெல்வோர்க்கு ரூ.6 கோடி பரிசுத்தொகை வழங்குவதாக அறிவித்துள்ளன. வெள்ளி, வெண்கலம் வெல்வோர்க்கு முறையே ரூ.4 கோடியும் ரூ.2.5 கோடியும் கிடைக்கும். அத்துடன், மத்திய அரசும் தங்கம், வெள்ளி, வெண்கலப் பதக்கங்களை வெல்வோர்க்கு முறையே ரூ.75 லட்சம், ரூ.50 லட்சம், ரூ.30 லட்சம் வழங்கப் படும் என அறிவித்துள்ளது. இந்தப் பரிசுத்தொகை உலகின் மற்ற நாடுகளைக் காட்டிலும் அதிகம் எனக் கூறப்படுகிறது.