வெள்ளை மாளிகை அருகே துப்பாக்கிச் சூடு; இருவர் காயம்

வெள்ளை மாளிகை அருகே துப்பாக்கிச் சூடு; இருவர் காயம்

1 mins read
3180398f-23ae-4418-b586-878c7292634b
-

வாஷிங்டன்: வாஷிங்டனில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் கண்மூடித்தனமாக சுட்டதில் இருவர் காயம் அடைந்தனர். வெள்ளை மாளிகையிலிருந்து ஒன்றரை கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இரு வெவ்வேறு உணவகங்களில் துப்பாக்கிச் சூடு நடந்தது. துப்பாக்கிக்காரன் சரமாரியாகச் சுட்டதும் உட்கார்ந்திருந்த அனைவரும் ஓட்டம் பிடித்தனர்.

இருபது முறை அந்த நபர் சுட்டதாகவும் பின்னர் காரில் ஏறி தப்பி விட்டதாகவும் சம்பவத்தை நேரில் பார்த்த சிலர் கூறினர். இருவர் மீது குண்டு பாய்ந்ததாக உள்ளூர் போலிஸ்காரர் ஒருவர் தெரிவித்தார். இருவரில் ஒருவர் மர்ம நபரின் இலக்காக இருக்கக்கூடும் என்று அவர் கூறினார்.

மர்ம நபரை போலிசார் தேடி வருகின்றனர்.