உணவங்காடி நிலையக் கடைக்காரர்களுக்கு உதவி

என்இஏ நடத்தும் நிலையங்களில் கடை நடத்துவோருக்கு ஒருமுறை $500 ரொக்கம்

உண­வங்­காடி நிலை­யங்­க­ளி­லும் ஈரச்­சந்­தை­க­ளி­லும் கடை நடத்­து­வோர் கடு­மை­யாக்­கப்­பட்டு உள்ள கொவிட்-19 கட்­டுப்­பா­டு­க­ளால் பாதிப்­புறா வண்­ணம் உத­வித்­தொகை வழங்­கப்­படும் என அறி­விக்­கப்­பட்டு உள்­ளது.

தேசிய சுற்­றுப்­புற வாரி­யம் (என்இஏ) நடத்­தும் உண­வங்­காடி நிலை­யங்­களில் கடை வைத்­தி­ருப்­போர் ஒரு­முறை வழங்­கப்­படும் $500 ரொக்­கம் பெறு­வார்­கள் என நிதி அமைச்சு நேற்று தெரி­வித்­தது. புதி­தாக உரு­வாக்­கப்­பட்­டுள்ள ஈரச்­சந்தை மற்­றும் உண­வங்­காடி நிலைய நிவா­ரண நிதி­யி­லி­ருந்து அவர்­க­ளுக்கு இந்த உத­வித்தொகை வழங்­கப்­படும். தேசிய சுற்­றுப்­புற வாரி­யத்­தால் நிய­மிக்­கப்­பட்ட கடைக்­கா­ரர்­களும் இந்த உத­விக்­குத் தகுதி பெறு­வர்.

சமூ­கத்­தில் கொவிட்-19 கிரு­மிப் பர­வ­லைக் கட்­டுப்­ப­டுத்­தும் நோக்­கில் கடு­மை­யாக்­கப்­பட்­டுள்ள கட்­டுப்­பா­டு­கள் நேற்று முன்­தி­னம் முதல் ஆகஸ்ட் 18ஆம் தேதி வரை நடப்­பில் இருக்­கும்.

இந்­தக் கால­கட்­டத்­தில் உண­வுக் கடை­களில் அமர்ந்து சாப்­பி­டத் தற்­கா­லி­கத் தடை விதிக்­கப்­பட்டு உள்­ளது. இத­னால், கடைக்­கா­ரர்­க­ளுக்கு ஏற்­படும் பாதிப்பை ஓர­ளவு சரிக்­கட்­டும் வித­மாக ரொக்க உத­வித் தொகை அறி­விக்­கப்பட்டு உள்­ளது. இது ஏற்­கெ­னவே நடப்­பில் உள்ள உத­வி­க­ளுக்­குக் கூடு­த­லாக இடம்­பெ­று­கிறது. கட்­டுப்­பா­டு­க­ளால் உண­வங்­காடி நிலை­யக் கடைக்­கா­ரர்­க­ளுக்கு ஏற்­படும் நிதி நெருக்­க­டி­யைச் சமா­ளிக்­கும் நோக்­கில் ஒரு மாத வாட­கைத் தள்­ளு­படி, மேசையை சுத்­தம் செய்­தல் மற்­றும் ஒரு­

நி­லைப்­ப­டுத்­தப்­பட்ட பாத்­தி­ரம் கழு­வும் சேவை­கள் ஆகி­ய­வற்­றுக்­கான கட்­ட­ணத்­தில் சலுகை போன்­றவை இதற்கு முன்­னர் அறி­விக்­கப்­பட்டு இருந்­தன. மொத்­த­மாக, இத்­த­கைய கடைக்­கா­ரர்­க­ளுக்கு கடந்த ஆண்டு முதல் எட்டு மாத வாட­கைத் தள்­ளு­ப­டி­யும் ஆறு மாதக் கட்­ட­ணச் சலு­கை­யும் வழங்­கப்­பட்டு உள்­ளன.

உண­வங்­காடி நிலை­யக் கடைக்­கா­ரர்­க­ளுக்கு வழங்­கப்­படும் உத­வி­கள் தொடர்­பான மேல்­வி­வ­ரங்­களை தேசிய சுற்­றுப்­புற வாரி­யம் பின்­னர் அறி­விக்­கும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

இவர்­கள் தவிர, மீண்­டும் உணவு விநி­யோ­கத்­துக்கு மாறி­யுள்ள உணவு, பான வர்த்­த­கங்­களும் சலு­கை­க­ளைப் பெற உள்­ளன. எண்­டர்­பி­ரைஸ் சிங்­கப்­பூர் தயா­ரித்­துள்ள உணவு விநி­யோக ஊக்­கு­விப்பு உத­வித்­தொ­குப்­பின் கீழ் உணவு விநி­யோ­கக் கட்­ட­ணத்­தில் அவற்­றுக்­குச் சலுகை வழங்­கப்­படும். இதற்கு முன்­னர், இவ்­வாண்டு மே 16 முதல் ஜூலை 15 வரை நடப்­பில் இருந்த இந்த உத­வித் தொகுப்பு மீண்­டும் அறி­மு­கம் செய்­யப்­பட்டு உள்­ளது. நேற்று முன்­தி­னம் தொடங்கி ஆகஸ்ட் 18ஆம் தேதி வரை இச்­ச­லுகை அளிக்­கப்­படும். உணவு விநி­யோ­கத் தளங்­கள் வசூ­லிக்­கும் தர­வுத் தொகை­யின் ஐந்து விழுக்­காட்டு புள்­ளி­க­ளுக்கு எண்­டர்­பி­ரைஸ் சிங்­கப்­பூர் அமைப்பு நிதி ஆத­ரவு வழங்­கும். அதே­போல மூன்­றாம் தரப்பு தள­வாட பங்­கா­ளி­க­ளைப் பயன்­ப­டுத்­தும் வர்த்­த­கங்­க­ளுக்­கான விநி­யோ­கச் செல­வில் 20 விழுக்­காடு வரை­யான ஆத­ர­வை­யும் அது வழங்­கும்.

இந்­நி­லை­யில், புதி­தாக அறி­விக்­கப்­பட்­டுள்ள உத­வி­கள் பற்றி நீடித்த நிலைத்­தன்மை, சுற்­றுப்­புற அமைச்­சர் கிரேஸ் ஃபூ தமது கருத்­து­க­ளை ஃபேஸ்புக்­கில் பகிர்ந்­துள்­ளார்.

"கொவிட்-19 சூழ­லால் வாடிக்­கை­யா­ளர்­கள் குறைந்து, மோச­மா­கப் பாதிக்­கப்­படும் கடைக்­கா­ரர்­க­ளுக்கு உதவி செய்ய நாம் கடப்­பாடு கொண்­டுள்­ளோம். மூத்­தோர் உள்­ளிட்ட பொது­மக்­கள் பல­ரும் அடிக்­கடி செல்­லும் இடங்­க­ளான நமது ஈரச்­சந்­தை­களும் உண­வங்­காடி நிலை­யங்­களும் கிரு­மித்­தொற்று பர­வும் அபா­யத்தை அதி­க­மா­கக் கொண்­டுள்­ளன. எனவே, சிறந்த முறை­யில் தொடர்­புத் தடங்­களை அறி­யும்­பொ­ருட்டு இந்த இடங்­களில் சேஃப்என்ட்ரி பதி­வு­மு­றை­யும் பாது­காப்பு நிர்­வாக நடை­மு­றை­களும் மேம்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன," என்று அவர் தெரி­வித்­துள்­ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!