சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு கூடுதல் வாடகை சலுகை

சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு கூடுதல் வாடகை சலுகை

2 mins read
7f9db0f5-0d6d-4081-9410-a22bd9383465
-

சமூ­கத் தொற்­று­க­ளைக் கட்­டுப்­

ப­டுத்­தும் நோக்­கில் சிங்­கப்­பூ­ரில் கட்­டுப்­பா­டு­கள் கடு­மை­யாக்­கப்­பட்டு உள்­ள­தைத் தொடர்ந்து சிறிய, நடுத்­தர நிறு­வ­னங்­களை நடத்­து­வோர் வாடகை செலுத்த கூடு­தல் உதவி அறி­விக்­கப்­பட்டு உள்­ளது.

வர்த்­த­கக் கட்­ட­டங்­களில் நிறு­வ­னம் நடத்­தும் தகு­தி­யுள்­ளோ­ருக்கு இந்த உதவி கிட்­டும்.

ஆண்டு வரு­வாய் $100 மில்­லி­ய­னுக்கு மிகாத சிறிய, நடுத்­தர நிறு­வ­னங்­கள் மற்­றும் லாப நோக்­க­மற்ற அமைப்­பு­கள் இந்த வாடகை நிவா­ர­ணத்­திற்­குத் தகு­தி­பெ­றும் என நிதி அமைச்சு நேற்று தெரி­வித்­தது.

அர­சாங்­கத்­திற்­குச் சொந்­த­மான வர்த்­த­கக் கட்­ட­டங்­களில் நிறு­வ­னம் நடத்­தும் தகு­தி­யுள்ள வாட­கை­தா­ரர்­கள் நான்கு வார வாட­கைத் தள்­ளு­ப­டி­யைப் பெறு­வர்.

அதே­நே­ரம், தனி­யார் வர்த்­த­கச் சொத்­து­களில் இருக்­கும் தகு­தி­யுள்ள வாட­கை­தா­ரர்­கள் மற்­றும் நிறு­வ­னம் நடத்­து­ப­வர்­கள் வாடகை ஆத­ர­வுத் திட்­டத்­தின்­கீழ் இரு வார வாடகை ரொக்க நிவா­ர­ணம் பெறு­வர்.

இந்த வாடகை நிவா­ரண நட­வ­டிக்­கை­கள் நேற்று முன்­தி­னம் தொடங்கி ஆகஸ்ட் 18 வரை நீடிக்­கும் இரண்­டாம் கட்ட உயர் விழிப்­பு­நிலை கட்­டுப்­பா­டு­க­ளால் ஏற்­படும் பாதிப்­பு­க­ளைச் சரிக்­கட்ட உத­வும். அர­சாங்­கக் கட்­ட­டங்­களில் இருப்­போ­ருக்கு இந்த நான்கு வார காலத்­திற்கு முழு­மை­யான வாட­கைக் தள்­ளு­ப­டி­யை­யும் தனி­யார் கட்­ட­டங்­களில் இருப்­போர் கட்­டுப்­பாட்டு காலத்­தின் பாதி அள­வுக்கு, அதா­வது இரு வாரங்­க­ளுக்­கான வாடகை உத­வி­யை­யும் பெறு­வர்.

கடு­மை­யா­கப்­பட்ட பாது­காப்பு நிர்­வாக நடை­மு­றை­க­ளால் பாதிக்­கப்­படும் வர்த்­த­கங்­க­ளுக்­கும் ஊழி­யர்­க­ளுக்­கும் உத­வும்­பொ­ருட்டு நேற்று அறி­விக்­கப்­பட்ட $1.1 பில்­லி­யன் ஆத­ர­வுத் திட்­டத் தொகுப்­பின் ஒரு பகுதி இந்த வாடகை நிவா­ர­ணம்.

இதற்கு முன்­னர், இவ்­வாண்டு மே 16 முதல் ஜூன் 13 வரை­யில் இரண்­டாம் கட்ட விழிப்­பு­நி­லைக் கட்­டுப்­பா­டு­கள் நடப்­பில் இருந்­த­போ­தும் இதே­போன்ற வாடகை உத­வித் தொகை வழங்­கப்­பட்­டது.

கட்­டுப்­பா­டு­கள் கடு­மை­யாக்­கப்­படும் கட்­டங்­களில் பாதிக்­கப்­படும் வர்த்­த­கங்­க­ளுக்கு வாடகை உதவி அளிக்­கு­மாறு வர்த்­த­கக் கட்­ட­டங்­ க­ளின் உரி­மை­யா­ளர்­களை அரசாங்­கம் ஊக்­கு­வித்­த­போ­தி­லும் மிகச் சிலரே அவ்­வாறு செய்­வ­தாக பல்­வேறு வாட­கை­தா­ரர்­க­ளி­டம் இருந்து கருத்­து­கள் பெறப்­பட்டு இருப்­ப­தாக நிதி அமைச்சு அதன் அறிக்­கை­யில் குறிப்­பிட்­டது.

அதே­நே­ரம் சிர­மங்­களை எதிர்­நோக்­கும் கட்­டட உரி­மை­யா­ளர்­கள் இருப்­ப­தை­யும் அவர்­க­ளின் நிலை­மை­யை­யும் பரி­சீ­லிக்க வேண்­டும் என்­ப­தை­யும் ஒப்­புக்­கொள்ளவேண்டி உள்­ள­தாக அமைச்சு கூறி­யுள்­ளது.